Asianet News TamilAsianet News Tamil

மாற்றம்... முன்னேற்றம்... 7 சீட்டு!! அடடே...? ராமதாஸை தெறிக்க விடும் விமர்சனம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது.  இதையடுத்து சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை 11.50 மணிக்கு  ராமதாஸ்,   எடப்பாடி பழனிச்சாமி,  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதிமுகவுடனான கூட்டணியால் பாமகவை வறுத்தெடுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Social media users troll PMK ramadoss
Author
Chennai, First Published Feb 19, 2019, 2:36 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது.  இதையடுத்து சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை 11.50 மணிக்கு  ராமதாஸ்,   எடப்பாடி பழனிச்சாமி,  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதிமுகவுடனான கூட்டணியால் பாமகவை வறுத்தெடுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். பாமகவினரோ பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மணிமாறன்....: சமகால அரசியல் அரங்கில் அணிமாறாத கட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். கொஞ்சத்திற்குக் கொஞ்சமேனும் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, முகாம் மாறுவதற்கான காரணங்களை படிப்படியாக எடுத்துவைத்த பிறகே பெரும்பாலான கட்சிகள் அனிமாறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, காலையில் ஒரு அணியுடன், மாலையில் ஒரு அணியுடன் பேச்சு நடத்திவிட்டு, நேற்றுவரை காறித் துப்பிய கட்சியுடன் கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ இல்லாமல் கூட்டு சேரும் ஒரு கட்சி இந்தியாவில் உண்டென்றால்...அது நிச்சயம் பாமகதான்!

கடந்த இரண்டாண்டு காலத்தில் அடிமை ஆட்சியாளர்களை திமுகவை விட அதிகமாக விமர்சனம் செய்த கட்சி பாமகதான். நாள் தவறாமல் எடப்பாடி அன்கோவை அப்பாவும், மகனும் வறுத்தெடுத்தது நாட்டு மக்கள் நினைவில் இப்போதும் பசுமையாக உள்ளது. இப்போது ஜீரணிப்பதற்குக் கூட நேரம் தராமால் திடுதிப்பென சோரம் போயிருக்கிறது அந்தக் கட்சி.

நடப்பு அரசியலின் அவமானச் சின்னங்கள்...ஐயாவும், சின்னையாவும் என பதிவிட்டுள்ளார்.

முத்துக்குமார் என்பவர்...  அரசியல் ரீதியான நிலைப்பாடுகளை, தங்கள் சுயநலத்திற்காக மாற்றிக்கொள்வதில் பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் இங்கே தயக்கம் காட்டுவதே இல்லை. அதிலும் டாக்டர் ராமதாஸ் போன்றோர், கண் இமைக்கும் நேரத்தில் நிலைப்பாடுளை மாற்றிக்கொள்வதில் வல்லவர் என்பதை நிருபித்தவர், அதை இப்போதும் நிருபித்து இருக்கிறார்...

தனது குடும்பத்தின் சுயலாபத்திற்காக, அப்பாவி தொண்டர்களின் உழைப்பை அடகு வைப்பதில், ராமதாஸ் எப்போதும் முன்னணியில் இருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளாக இந்த அரசின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர், இப்போது அந்த விமர்சனங்களை எத்தனை கோடிகளுக்கு விற்றார் என தெரியவில்லை.

பாஜகவின் அடிமை அரசு, அடிமை அமைச்சர்கள் என விமர்சனம் வைத்த அதே ராமதாஸ், இப்போது அதே அடிமைகளின் வரிசையில் இணைந்து இருக்கிறார். இன்னும் எத்தனை நாள், ஜாதி ரீதியிலான உணர்ச்சிளை கொண்டு தொண்டர்களை உசுப்பேற்றி, பின்னர் சுயலாபத்திற்காக அந்த உணர்ச்சிகளை விலை பேசப்போகிறார் என தெரியவில்லை...

இங்கே எவனுக்கும் வெட்கமும் இல்லை, பணம் பெற தயக்கமும் இல்லை...

தமிழர்களே, நமக்கான தன்மான அரசியலை முன்னெடுப்பவர்களோடு கரம் கோருங்கள், தினகரன் அதில் பொருந்தி போவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

உதயகுமார்... தேர்தல் கூட்டணி கொஞ்சம் வேதனையை தருகிறது, ராமதாஸ் ஐயா கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாம்னு தோனுது. இது என்னோட தனிப்பட்ட கருத்து, விவாதத்திற்கு நான் வரலை.
 

ஆளுனரிடம் அளித்த 25 அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலின் அடிப்படையில், ஒரு அமைச்சர் தலா 20 கோடி வீதம், மொத்தம் 500 கோடி தந்துவிட்டதால், அந்த ஊழல் பட்டியலை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்... என அடுத்து ராமதாஸ் அறிவித்தாலும் அறிவிப்பார்...

“கூட்டணியாள நம்ப அடைந்தது என்ன? ஒரு 30 மலை சீட்டுக்காக எதுக்கு? ஒரு 18-20 MLA வுக்கும், 5 MP க்கும் எதுக்கு கூட்டணி வச்சிக்கனும்னு இளைஞர்களே கேக்கறங்க. அதனால.. எப்போதும் திராவிட கட்சிகளோடு கூட்டணி கிடையாது.” – ராமதாஸ் 6 மாதங்களுக்கு முன்பு.

Follow Us:
Download App:
  • android
  • ios