நேற்று அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக் காட்டி தெளிய தெளிய சமூக வளைத்தளங்களில் வெச்சு செய்கின்றனர். சுமார் 45 வருடமாக சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த  ரஜினி ஜுனியர் நடிகரான அஜித் வசூலில் தன்னை மிஞ்சும் அளவிற்கு    பொங்கல் ரேஸில் மரண காட்டு காட்டியது. 

அதுமட்டுமா அரசியலுக்கு அதோ வரேன், இதோ வரேன் சுமார் 20 வருஷங்களுக்கு மேலாக என ரசிகர்களை எதிர்ப்பார்ப்பை ஏமாற்றி, படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் உசுப்பிவிட்டு சைலண்ட்டாக இருந்து வந்தார். 

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஜாம்பவான்கள் மறந்ததும்,   ஒரு வழியாக  அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்னவர், இதே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது ஆனால் இன்னமும் கட்சியை ஆரம்பிக்கும் மேட்டரை பற்றி வாய் திறப்பதே இல்லை. 

படம் வெளியாகவும் சில நாட்களுக்கு முன்பு மறக்காமல் செய்தியாளர்களை சந்திப்பது. ஏதாவது சர்ச்சையான விஷயத்தை கிளறி  படங்களையும் ஓட வைத்து வசூலை அள்ளுவதுமாக இருந்தார்.  ஆனால், நேற்று அறிக்கை மூலம் பதிலடி கொடுத்த தல அஜித்தோ அரசியலே வேண்டாம் என  தெளிவாக இருந்தவர் அஜித்.

 அரசியலே வேண்டாம் என சொல்லும் அஜித்தை,  அதோ வரேன் இதோ வரேன் என அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சர்ச்சையை கிளப்பும் நடிகர்கள் மத்தியில் தல டாப்பில் இருப்பது இன்று நிஜமாகியுள்ளது. 

பிஜேபியின் பிம்பம் என்று சொல்லும் அளவுக்கு சரியான பதிலடி கொடுக்கமுடியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார் ரஜினி. ஆனால் அஜித், தன் ரசிகர்களை அவர்களது சுயலாபத்திற்காக பயன்படுத்த முயலும் பிஜேபிக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார்த்தைக்கு வார்த்தை என் பெயரையும், என் ரசிகர்களையும் என அழுத்தமாக சொல்லியுள்ளார். சுயலாபத்திற்காக பயன்படுத்த நினைப்பவர்களிடமிருந்து தன்னையும், தனது ரசிகர்களையும் சேர்த்துக் காப்பாற்றியுள்ளார்.  

படம் வெளியாகப்போகிறது ஏதோ கருத்து சொல்கிறேன் என  எதையாவது சர்ச்சையாக சொல்லி விட்டு  படத்தை ஓடவைக்க முயற்சிப்பதில்லை, படம் வெளியாகும் சில மாதங்களுக்கு முன்புதான் ரசிகர்மன்றத்தைக் கலைத்தார். தன்னுடைய பெயரை பயன்படுத்தி  சிலர் சம்பாதிப்பதை விரும்பவில்லை,  தன்னுடைய கெத்தை சாயம் படாமல் சரியாக பார்த்துக்கொள்கிறார். 

எனது அதிகபட்ச அரசியல் தொடர்பு ஒரு சராசரி இந்தியனாக வரிசையில் நின்று வாக்களிப்பதே'. என அறிக்கையில் ஹைலைட்டாய் சொன்னது அரசியல் தலைவர்களையே கவர்ந்துள்ளது. "ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும், அரசியல் வாதிகள், பொதுமக்கள் ரசிகர்கள் என ஒட்டுமொத்தமாக கெத்தாவே உயர்ந்து நிற்கிறார் தல அஜித்" என இப்படியான பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உயர்ந்து நிற்கிறது.