சமூக ஆர்வலர் முகிலனுக்கு  ஜாமீன் நிபந்தனை  தளர்த்தி  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதுடன்,   
வாரம் ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53). இயற்கை வள பாதுகாப்பு,  ஜல்லிக்கட்டு போராட்டம்  உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்தவர்  திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு திவு செய்தனர்.  பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதுதானார்.
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.  இதில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்,

 

இந்நிலையில் கையெழுதிடுவத்தில் இருந்து நிபந்தனை தளர்த்த கோரி முகிலன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருத்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்  விசாரணைக்கு வந்தது,  அப்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுதிடுவத்தில் இருந்து தளர்த்தி  வாரம்  ஒரு முறை கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.