*    ஆட்சிக்காலம் முடியும் நிலையில் அரசு செலவில் சுற்றுலா பயணம் செல்கின்றனர் தமிழக அமைச்சர்கள். இது தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருந்தால் வரவேற்கத்தக்கது:    திருமா வளவன். 
(அப்படியா தல, நீங்க கூட  இப்ப சமீபத்துல லண்டன் போனீங்க, பஞ்சாயத்து ஆச்சு, இப்ப வரைக்கும் அந்த விவகாரம் ஓடிட்டு இருக்குது. நீங்க கூட கட்சியோட நலனை மனசுல வெச்சு லண்டன் ட்ரிப் ஸ்பான்சர்ஸை முடிவு பண்ணியிருந்தா இந்த சிக்கலே வந்திருக்காதே! அப்படின்னு உங்க கட்சிக்காரங்களே சொல்றாங்களே.)

*    அரசு ஆசிரியர்கள் அவர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்:     புதுவை முதல்வர் நாராயண சாமி. 
(அரசாங்கத்தை நடத்துற முதல்வரான நீங்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலதான் ட்ரீட்மெண்ட் எடுக்கணும், கவர்மெண்ட் பஸ்லதான் எங்கேயும் போய் வரணும், ரேஷன் கடையிலதான் அரசி வாங்கி பொங்கணும்னு...பதிலுக்கு அவங்களும் கோரிக்கை வெச்சாக்க என்ன பண்ணுவீங்க தல?)

*    தமிழுணர்வு சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கும் அ.தி.மு.க. அரசு, கருத்துரிமை, கல்வி கற்கும் உரிமையை நசுக்கி கொலை செய்கிறது:    மு.க.ஸ்டாலின். 
(இருக்கட்டும்ணே, ஆனா உங்களோட மகள் செந்தாமரை சபரீசன் ஒரு ஹைடெக் பள்ளி நடத்துறாங்க, அதில் ஹிந்தி கற்றுத்தரப்படுதுன்னு ஒரு விமர்சனம் ஓடிட்டே இருக்குதே, அதுக்கு எப்பதான் வாயும், மாங்காயும் புளிக்காம பதில் சொல்லப் போறீங்க?)

*    ப.சிதம்பரத்துக்கு இருவார நீதிமன்ற காவல் உறுதியானதும் அவரது மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் கண் கலங்கினர். அவர்கள் சிதம்பரத்தைப் பார்க்க, அவரோ எக்கத்துடன் அவர்களைப் பார்த்தார்:    செய்தி. 
(கட்! இதே ஃபீலிங்ஸோட ஊட்டி ஹெச்.பி.எஃப் தொழிற்சாலையில் பல நூறு ஊழியர்களோட நிலைமையை, கஷ்டத்தை, உணர்வுகளை நினைச்சுப் பார்த்து, பேக்கிரவுண்ட்ல இதே சோக கீதத்தை உருக்கி ஊத்தி யோசியுங்க மிஸ்ட & மிஸர்ஸ் சிதம்பரம்)

*    பா.ஜ.க.வை பகைத்தால் கைதாகிடுவோம் என்று அரெஸ்ட் பயத்தில் இருப்பது அ.தி.மு.க. அமைச்சர்கள்தான். அவர்கள் வீடுகளில்தான் ரெய்டு நடந்துள்ளது. ஏகப்பட்ட வழக்குகளும் அவர்கள் மீதுதான்  உள்ளது:    கே.எஸ்.அழகிரி. 
(ப.சிதம்பரம் அரெஸ்ட்டுக்கு கூட நீங்க இவ்வளவு பாய்ச்சல் காட்டல. ஆனால், ஸ்டாலினை பார்த்து ஜெயக்குமார் சொன்ன சொல்லுக்காக என்னா பாய்ச்சல் காட்டுறீங்க! ஹும் எல்லாம் கூட்டணி படுத்துற பாடு)

-    விஷ்ணுப்ரியா