தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வரப்போவது சமத்துவ மக்கள் கட்சி தான், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடலாமா? என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கட்சி நிர்வாகிகளை அல்லு தெறிக்க விட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் ரஜினி, கமல், எடப்பாடி, ஓ.பி.எஸ், மோடி, ஸ்டாலின் என  தாறுமாறாக விமர்சித்து தள்ளியிருக்கிறார். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னை கூட்டணியில் இணைத்திருந்தால் இந்நேரம் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருப்பார், பாவம் அவருக்கு கூட்டணி கணக்கு பற்றிய புரிதல் இல்லாதவர் என சரத்குமார் ஆவேசமாக பேசினார். திடீரென மனுஷன் என்ன நினைத்தாரோ  ராமதாசையும், அவரது மகன் அன்புமணியையும் கிழித்து தொங்கவிட்டுருக்கிறார். 

மேலும், தான் ஒரு போதும் பாஜக கூட்டணியில் எந்தக்காலத்திலும் சேரமாட்டேன்எனக் கூறினார். திடீரென யூடர்ன் அடித்த சரத்குமார்,  மாவட்ட நிர்வாகிகளை பார்த்து 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாமா எனக் கேள்வி எழுப்பிய அவர், யார் தொகுதிக்கு 15- 20 லட்சம் வரை செலவு செய்ய முடியுமோ அவர்கள் சொல்லுங்கள் என சொன்னதும் ஏசி போட்ட அந்த அறையில் அமர்ந்திருந்த மொத்த நிர்வாகிகளுக்கும் வேர்த்து விட்டதாம், பாவம் அவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையாம்.