கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்து ரவிகுமார் எம்பி டெல்லியில்  மனு அளித்தார்.

அதில் விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிகுமார் அமைச்சரிடம் வழங்கினார். ஆனால் அமைச்சர் அந்த மனுவை முறையாக வாங்காமல் அலட்சியமாக வாங்கினார்.

ரவிகுமார் எம்பியும் வேறு வழியில்லாமல் அமைச்சரின் அந்த அலட்சியப் போக்கை சிரித்துக் கொண்டே சமாளித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கொடுக்கும் மனுவை எப்படி வாங்க வேண்டும் என்ற அடிப்படை பண்பும் நாகரீகமும் கூட தெரியாத ஒரு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என  அரசியல் கட்சியினரும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.