Smart card to track students
மாணவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை பெற்றோர்கள் செல்போன் மூலம் கண்காணிக்க சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதி வண்டிகள் விரைவில் வழங்கப்படும் என்றார்.
சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை பெற்றோர்களால் கண்காணிக்க முடியும் என்றார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால், முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வித் துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அப்போது
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
