தொண்டர்களை சந்திக்கும் பயணம் :

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கும் “உங்களுடன் நான்’’ நிகழ்ச்சி மாவட்டம்தோறும் நடந்துவருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த், பெரம்பலூரில் தொண்டர்களுடன் கலந்துரையாடும் போது , ஒரு தொண்டரை பளார் என அறைந்தார்.

எதற்கு பளார் :

பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று மதியம் 1.15 மணிஅளவில் திருமண மகாலின் மாடியில் இருந்து விஜயகாந்த் கீழே இறங்கி தனது காருக்கு தேன்ற போது, ஆசையாக விஜயகாந்தை பார்க்க வந்த கட்சிச் தொண்டர் ஒருவர் ,“கேப்டன் வாழ்க, கேப்டன் வாழ்க“ என்று கோ‌ஷம் எழுப்பியுள்ளார்.

சம்பந்தமே இல்லாமல் கடுப்பான விஜயகாந்த் :

விஜயகாந்த் காதின் அருகே அவர் கோ‌ஷம் எழுப்பியதால் கோபமடைந்த விஜயகாந்த் அந்த தொண்டரின் கன்னத்தில் ‘‘பளார்’’ என அறைந்ததால் , அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சிரிச்சிகிட்டே விஜயகாந்த்தை களாய்த தொண்டர்.....!!!

விஜயகாந்திடம் அறைவாங்கிய அந்த தொண்டரும், தன்னை தலைவர் செல்லமாக தான் அறைந்தார் என சிரித்துக்கொண்டே சென்றது, விஜயகாந்தையே கலாய்தது போன்று இருந்தது.