Asianet News TamilAsianet News Tamil

செயலிழந்த எடப்பாடி அரசு...! ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Skillful government ... G.Ramakrishnan
Skillful government ... G.Ramakrishnan
Author
First Published Aug 30, 2017, 12:11 PM IST


எடப்பாடி பழனிசாமி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறியதாகவும் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தற்போது தமிழக அரசியலில் பரபரப்புக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சம் இல்லா நிலை உள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு, அதிமுக மீண்டும் 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரிடம் மனு கொடுத்திருந்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி அரசு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா, தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று ஆளுநரை சந்தித்தனர். அப்போது, எடப்பாடி அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தியதாக அவர்கள் கூறினர்.

ஆளுநரை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய, ஜி.ராமகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி அரசு, செயல்படாத அரசாக உள்ளது. காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது. சட்டம் ஒழுங்கு தலைவிரித்தாடுகிறது.

தமிழக முக்கிய பிரச்சனைகளில் நடவடிக்கை எடுக்காத திறனற்ற, இந்த அரசு தன்னுடைய பெரும்பான்மையை இழந்தபொழுது, எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இதற்கு ஆளுநர், உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். புதுச்சேரிக்கு கடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு ஜி.ஆர். கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios