மகாராஷ்ட்ரா மக்கள் தங்கள் எதிரிகளை அதாவது பாஜகவை அரபிக் கடலில் மூழ்கடிப்பார்கள் என்று தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சிவசேனா கடுமையாக சாடியுள்ளது . கொரோனா வைராஸ் மகாராஷ்ட்ராவை உலுக்கி வரும் நிலையில் தற்போது அம்மாநில ஆளுங்கட்சியான  சிவசேனா மத்திய பாஜகவை கடுமையாக திட்டித் தீர்த்துவருகிறது. சிவசேனாவுடன் பாஜக கொள்கை ரீதியாக  நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பது என்ற போட்டியில் எழுந்த மோதல் இன்னும் அங்கு உக்கிரமாக மாறியுள்ளது.  இப்போதெல்லாம் பாஜகவின் பரம எதிரியைபோல  சிவசேன எதிர்வினை ஆற்றி வருவதை காணமுடிகிறது.  அதாவது,  இந்தியாவின் வர்த்தக தலைநகராக மும்பை உள்ளது ,  பன்னாட்டு வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களை மும்பையில்தான் நிறுவியுள்ளனர், 


 
இந்நிலையில் மும்பையில் உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தை பாஜக ஆளும் குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மாற்றி மத்திய பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .  இதுதான் சிவசேனாவின் இத்தனை கோபத்துக்கும் காரணம். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு  தனது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாகவே பாஜகவை அரபிக் கடலில் மூழ்கடிப்போம்  என்று ஆளும் சிவசேனா கட்சி தனது சாம்னா நாளேட்டில்  தலையங்கம் எழுதியுள்ளது .  பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோதுதான் மும்பை சர்வதேச நிதி சேவை மையத்தை குஜராத்தின் அகமதாபாத்திற்கு மாற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது  .ஆனால் மத்திய அரசில் நடவடிக்கைக்கு அவர் எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை ,  பட்னாவிஸ் மகாராஷ்டிராவுக்கு பதிலாக குஜராத்தை ஆதரிக்கிறார் என்று அப்போதே சிவசேனா அவர் மீது குற்றம்சாட்டியது .  

இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் எதிர்ப்பு குரல் எழுப்பி இருந்தார் ,  ஆனாலும் இந்த எதிர்ப்புகள் அனைத்தையும் மீறி நிதி சேவை மையம் குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்த வெட்கம் இல்லாத மக்கள் ( தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜகவினர்) மகாராஷ்ட்ராவில் இன்னும் வாழ்கிறார்கள் என்றும்,  அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு விசுவாச மற்றவர்கள் என்றும் சாம்னா சாடியுள்ளது .  மேலும் மும்பையே  நாட்டின் 50 சதவீத மக்களுக்கு உணவளிக்கிறது ,  நாட்டின் 30 சதவீத வரி மும்பையிலிருந்து மட்டுமே செல்கிறது ,  இந்த உண்மைகளை ஏற்க விரும்பாத எவரும் மகாராஷ்டிராவில் வாழ தகுதியற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ள சாம்னா தலையங்கம் மகாராஷ்டிர மாநில மக்கள் இவர்களை அரபிக்கடலில் முழு அடிப்பார்கள் அந்நாள் வெகு தொலைவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.