மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டு வென்றாலும், எந்தக் கட்சி தலைமையில் ஆட்சி?என்பதில், முட்டல் ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சர்  பதவி தங்களுக்குத்தான் என்று சிவசேனா கட்சி உறுதியாக உள்ளது. அதனை விட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லாத பாஜக, சிவசேனாவை உடைத்தேனும் ஆட்சிக்கு வந்து விடுவது என்று முடிவுகட்டியுள்ளதாக கூறப்படுகிறது..

சிவசேனாவுக்கு முதலமைச்சர்  பதவி கிடைத்ததால், அதை தனக்குத்தான் வழங்க வேண்டும் என்று ‘தானே’ மாவட்ட எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே மூலம் உட்கட்சி குழப்பத்தை பாஜகஆரம்பித்து வைத்துள்ளது.
 
‘வருங்கால முதலமைச்சர்  ஏக்நாத்’ என்று ஏக்நாத்தின் ஆதரவாளர்கள், போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சுயேட்சை எம்எல்ஏ ரவி ராணா புதிய சர்ச்சையை துவக்கியுள்ளார்.“25 சிவசேனா எம்எல்ஏ-க்கள் பாஜக-வின் ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்கள் முதலமைச்சர்  பட்னாவிஸ் மற்றும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். 

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் பக்கம் சென்றால், கட்சி பிளவுபடும்; 25 பேரும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்று ராணா கூறியுள்ளார்.