சிவகங்கை: புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..! போர்கொடி தூக்கும் ஒன்றிய, நகர்செயலாளர்கள்..! குழப்பத்தில் திமுக
திமுக இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டப்பொறுப்பாளர்களை அறிவித்து வருகிறது. மாவட்டப்பொறுப்பாளர்களை நியமிக்க கூட ஐபேக் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது திமுக. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வடக்கு மாவட்டச்செயலாளராக பொன்.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் கூடுதலான மாவட்டப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது. சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரு சிலரை நியமனம் செய்வதற்கு ஒன்றிய செயலாளர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பி வருகிறார்கள்.
திமுக இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டப்பொறுப்பாளர்களை அறிவித்து வருகிறது. மாவட்டப்பொறுப்பாளர்களை நியமிக்க கூட ஐபேக் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது திமுக. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வடக்கு மாவட்டச்செயலாளராக பொன்.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து சிவகங்கை. இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் கூடுதலான மாவட்டப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது. சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரு சிலரை நியமனம் செய்வதற்கு ஒன்றிய செயலாளர்கள், நகர் செயலாளர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய தொகுதிகளுக்கு மாவட்டப்பொறுப்பாளராக பெரியகருப்பனையும். மானாமதுரை, சிவகங்கை தொகுதிகளுக்கு மாவட்ட துணைச்செயலாளராக இருக்கும் சேங்கை.மாறனையும் நியமிக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் வரவே 12ம்தேதி இராமநாதபுரம் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலுவிடம் புகார் மனுவை நீட்டியிருக்கிறார்கள் ஒன்றியச்செயலாளர்கள் நகர்செயலாளர் வரைக்கும்.
சேங்கைமாறனை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க கூடாது என்று புகார் கொடுத்திருக்கும் முக்கிய திமுக நிர்வாகிகளிடம் பேசிய போது..." சிவகங்கை மாவட்டத்தில் தா.கிருஷ்ணன் காலத்திற்கு பிறகு திமுக குறிப்பிட்ட வளர்ச்சியடையவில்லை. கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது சிவகங்கை தொகுதி திமுக வெற்றி பெற வேண்டியது.அதை வெற்றியை தோற்கடித்தது அதிமுக அல்ல. திமுகவினரே.! இது ஊரறிந்த விசயம்.
மானாமதுரை தொகுதி 2011ம் ஆண்டு போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தமிழரசிரவிக்குமார்.கண்ணுக்கு தெரிந்து வெற்றி வாய்ப்பை இழக்கச்செய்தார்கள் திமுக நிர்வாகிகள் அதில் ஒருவர் தான் சேங்கைமாறன்.இவர் மட்டும் தமிழரசி கொடுத்த ஒருகோடி பணத்தை திருப்புவனம் ஒன்றியத்தில் ஒழுங்காக மக்களுக்கு செலவு செய்திருந்தால் தமிழரசி வெற்றி பெற்றிருப்பார்.அந்த பணத்தைக்கொண்டு அமெரிக்கா சென்று விட்டார் சேங்கை. என் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கருணாநிதியிடம் அப்போதே தமிழரசி புகார் கொடுத்திருக்கிறார். 2016ம் போட்டியிட்ட சித்திரைசெல்வி நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட இலக்கியதாசன் ஆகியோர் பக்கம் பக்கமாக தலைமைக்கழகத்திற்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள்.அந்த புகாரை மையப்படுத்தி ஐபேக் டீம் விசாரணை நடத்துகிறார்கள். காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி மற்றும் சேங்கை மாறன் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார் ஏ.வ.வேலு.
திருப்புவனம் இளையான்குடி எப்போதும் திமுகவிற்கு அதிகமான வாக்குகளை வாங்கி கொடுக்கும் யூனியன். ஆனால் யூனியன் சேர்மன் பதவியை வாங்க மட்டும் கவுன்சிலர்களை வெற்றி பெற வைக்க முடியும் என்றால் எம்எல்ஏ தேர்தலில் இந்த யூனியன் பகுதியில் திமுகவிற்கு அதிக வாக்குகள் வாங்கி கொடுக்காமல் கட்சி கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு படுத்துக்கொள்ளுவார். அதுதான் இப்போது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
திருப்புவனம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து தெற்கு ஒன்றியச்செயலாளர் சேங்கை மாறன் மனைவி வசந்திக்கும் வடக்கு ஒன்றியம் அவருடைய வீட்டில் வேலைபார்த்த கடம்பசாமிக்கும் வாங்கி கொடுத்திருக்கிறார். இதுவே கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக சேங்கைமாறன் என்ற பெயரை ஃபேஸ்புக்கில் சிவகங்கைசேங்கை மாறன் என்று மாற்றியிருக்கிறாராம். சேங்கைமாறனை மாவட்ட பொறுப்பாளராக போட்டால் இரண்டு தொகுதிகள் தோற்பது உறுதி ஆகையால் அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்க கூடாது என்று முன்னாள் திருப்புவனம் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் அச்சங்குளம் முருகன். மானாமதுரை நகர் செயலாளர் பொன்னுச்சாமி சிவகங்கை வடக்கு ஒன்றியச்செயலாளர் ஜெயராமன் தெற்கு ஒன்றியச்செயலாளர் நெடுஞ்செழியன் சிவகங்கை நகர் செயலாளர் துரை. ஆனந்த் பொதுக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவிடம் நேரடியாக சென்று புகார் மனு வழங்கியிருக்கிறார்கள்.
சிவகங்கை திமுக மாவட்டச்செயலாளராக இருக்கும் பெரியகருப்பன் எம்எல்ஏ.மாவட்டத்தை பிரிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறாராம். மாவட்டம் பிரிப்பது உறுதியான நிலையில் தொட்டிலில் பிள்ளையை ஆடியும் கிள்ளியும் விடும் வேலை செய்து வருகிறார் என்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.
இந்த புகார்கள் குறித்து சிவகங்கை மாவட்ட திமுக துணைச்செயலாளர் சேங்கை மாறனிடம் பேசினோம்..
"என் மீது எந்த புகாரும் தலைமைக்கு போகவில்லை. நான் யாரையும் தோற்கடிக்கவில்லை. மக்கள் பார்த்து வாக்களிக்கிறார்கள்.அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். நான் இதுவரைக்கும் கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனது குறிக்கோள் கட்சியை வளர்ப்பது மட்டும் தான்.எனக்கு மாவட்ட பொறுப்பாளர் வழங்கினால் இரண்டு எம்எல்ஏக்களை வெற்றி பெற வைத்து கட்சிதலைவர் ஸ்டாலின் முன் நிறுத்துவேன்". என்றார்.