சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ, அமைச்சர்கள், எம்.பிக்கள் என பாரபட்சமின்றி கொரோனா தொற்று தாக்கி வருகிறது. அவர்களில் பலரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறி இருப்பதால் வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Scroll to load tweet…
