sitharamaiah had audio evidence regarding brainwashing the cong mla



கர்நாடக காங் MLA ஆனந்த்சிங் கடத்தல்..!  

கர்நாடக தேர்தலில் விஜயநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் MLA ஆனந்த்சிங் கடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா புகார் தெரிவித்துள்ளார்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபடுவோர் அவரை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் MLA-க்களிடம் பாஜக தலைவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது என சித்தராமையா பரபரப்பு புகார்

காங்கிரஸ் MLA-க்களிடம் கர்நாடக பாரதிய ஜனதா தலைவர்கள் பேசியதற்கான ஆதாரம் உள்ளதாகவும், காங்கிரஸ் MLA-க்களிடம் ஜனார்த்தனரெட்டி, எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர்கள் என்ன சலுகைகள் வழங்குவதாக கூறினார்கள், எப்படி குதிரைபேரத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் அந்த ஆடியோவில் உள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த  வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.