Asianet News TamilAsianet News Tamil

”சார் என்னை கட்டி பிடிச்சி..” கதறிக் கதறி அழுத கோவை மாணவி.. வெளியானது கைப்பேசி உரையாடல்..

மிதுன் மனைவி: தேவையில்லை.. நீ லைனில் இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நேரில் வரும்போது பேசிக்கொள்ளலாம். நாளைக்கு நீ வரும் போது உன்னிடம் உள்ள ஆதாரத்தை கொண்டுவா..

Sir hugged me.. kovai student Screaming with wife of teacher .. Phone conversation released.
Author
Chennai, First Published Nov 23, 2021, 5:37 PM IST

பல இளம் பெண்களை அறையில் அடைத்து பாலியல் வன்புணர்வு செய்து, அடித்து சித்திரவதை செய்த பொள்ளாச்சி காமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.யாரையும் சும்மா விடக்கூடாது என கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மாணவியை சதி வலையில் வீழ்த்தி, தகாத முறையில் நடந்து, அந்த மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பள்ளி ஆசிரியர்கள் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நடந்த அதே பள்ளியில் தான் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் ஆசிரியையாக  பணியாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது மிகப் பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில். அதில் என்னதான் நடந்தது என்பதை கோவை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மனைவியிடம், தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி நியாயம் கேட்டு கதறும் தொலைபேசி உரையாடல் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுழ அதன் விவரங்கள் பின்வருமாறு:- 

மிதுன் மனைவி: என்னை உன்னுடைய சகோதரியாக நினைத்துக்கொள். யார் மீது தவறு  இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு பிரச்சினை இல்லை, ஆனால் தைரியமாக ஓப்பனாக உண்மையை சொல்...

மாணவி: யாரிடமாவது இதை சொல்ல வேண்டும் இல்லை என்றால் எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது.

மிதுன் மனைவி: சரி பரவாயில்லை.. அது எப்போது நடந்தது...

மாணவி:  ஞாயிற்றுக்கிழமை... ஆடிட்டோரியம் படிக்கட்டில்.

மிதுன் மனைவி: ஏன்.? இதை நீ முன்கூட்டியே சொல்லவில்லை.? இது நடந்தவுடன் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டுமா இல்லையா.?

மாணவி: ஆமாம் மிஸ்.


மிதுன் மனைவி: நீ மாணவி தானே..? ஒரு ஆசிரியருக்கு அத்தனை முறை ஏன் மெசேஜ் அனுப்புற..

மாணவி: (யாரோ ஒரு மனைவியின் பெயரை குறிப்பிட்டு அவள்தான் எனக்கு மெசேஜ் செய்தார், சார் என்னை கட்டி பிடித்தார், முத்தமிட்டார் என்று எனக்கு அனுப்பினாள்)  

மிதுன் மனைவி:  நீ ஒரு நாள் மிதுன்சார் ரொம்ப அழகா இருக்கார்னு பேசிட்டு இருந்ததை  கேட்டு ஏற்கனவே அந்த மிஸ் உன்னை கண்டித்தாரா.?

மாணவி: ஆமாம் மிஸ்.. அப்படி நான் சொல்லவில்லை மிஸ். உடன் இருந்த மாணவிதான் சென்னார் மிஸ்.

மிதுன் மனைவி: ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக என் வீட்டிற்கு வந்தீர்கள், அப்போதுகூட சாரை ஏன் திட்டுகிறீர்கள் என நீ கேட்டாய்.. நான் உன்னுடைய லிமிட்டை தாண்டவேண்டாம் என்று எச்சரித்தேன் நினைவிருக்கிறதா.?

மாணவி: ஆமாம் மிஸ்..

மிதுன் மனைவி: மறுநாள் நான் உன்னை வீட்டிற்கு கூப்பிடவே இல்லை நீ ஏன் வந்த.

மாணவி: சார்தான் நீ வந்தால் நன்றாக இருக்கும் என்று மெசேஜ் செய்தார்,

மிதுன் மனைவி: நீதான் தொடர்ந்து ஹாய்.. ஹாய்... ஹாய் என அவருக்கு மெசேஜ் அனுப்புகிறாயே.? எதற்காக அப்படி செய்கிறாய்.?அப்படி ஒரு விஷயம் நடந்தவுடன் நீ என்னிடத்தில் புகார் சொல்லியிருக்க வேண்டாமா.?

மாணவி: எனது பெற்றோர்களுக்கு தெரிந்தால் இது பிரச்சனையாகிவிடும் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை மேடம்.


மிதுன் மனைவி: இல்லை இது எல்லோருக்கும் தெரியட்டும், நாம் நாளைக்கு தலைமையாசிரியரை சந்தித்துப் பேசலாம், இந்த மாதிரி நடந்தது என்பதை உன் பெற்றோர்களில் இடத்தில் நீ கூறலாம், அதில் ஒன்றும் தவறு இல்லை,என்னைப் பொறுத்தவரையில் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அவர் என்னுடைய கணவர் என்பதால் அவரை தப்பிக்க வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் நானும் ஒரு பெண்தான். வீட்டிற்கு வரச் சொல்லும்போது கூட உன்னை மட்டும் வரச் சொன்னால் அது சரியாக இருக்காது என்பதனால்தான் உன்னுடைய நண்பர்களோடு வர சொன்னேன். ஆனால் மறுநாள் நான் வரச் சொல்லவே இல்லை, நீயாக என் வீட்டிற்கு  வந்தாய். ஏன்.?

மாணவி: நீ என் வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறினார். அதனால் தான் வந்தேன்.

மிதுன் மனைவி: அவர்களுடன் நீ வெளியில் சென்றிருக்கிறாயா.?  

மாணவி: ஆமாம்  மிஸ்.. 

மிதுன் மனைவி: இதெல்லாம் உன் பெற்றோர்களுக்கு தெரியுமா.? நீ நன்றாக படிக்கிற பெண், எதற்காக சரியாக வகுப்புக்கு வருவதில்லை என்று நான் கேட்டேனா.? நீ அடிக்கடி வகுப்புக்கே வரவில்லையே.?  என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே பிரச்சனை அதனால் நான் வரவில்லை, அம்மாவுக்கு உதவி செய்கிறேன் என்று கூறினாய். மீண்டும் இதுபோன்ற தவறு செய்யாதே என்று நான் கூறினேன்.

மாணவி: ஆமாம் மிஸ்... உண்மையிலேயே என் அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் பிரச்சனை இருக்கிறது, அப்பா அவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார், என் அம்மா மட்டும் தான் இருக்கிறார்..

மிதுன் மனைவி: சரி பரவாயில்லை.. இவர் உனக்கு அனுப்பிய மெசேஜ் வைத்திருக்கிறாயா.?

மாணவி: இல்ல மிஸ்... 

மிதுன் மனைவி: ஏன் இல்ல.. அதை எதற்காக டெலிட் செய்தாய்.. அதுவும் ஒரு எவிடன்ஸ் தானே.? ஏன் அதை மறைக்கிறாய். 

மாணவி: மேடம் நான் குழந்தையாக இருக்கும்போதே நிறைய பேர் என்னை அபியூஸ் செய்திருக்கிறார்கள்... (தேம்பித் தேம்பி அழுகிறார் மாணவி) 

மிதுன் மனைவி: ஒன்றை தெரிந்து வைத்துக்கொள் நாம்தான் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் உன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்கிறாய் அப்போதே ஓங்கி அறைய வேண்டியதுதானே.? 

மாணவி: பயமாக இருந்தது மிஸ்.. 

மிதுன் மனைவி: உனக்கென்ன பயம்.. நீ  பதினோராம் வகுப்பு படிக்கிற மாணவி..குழந்தையா நீ.. உனக்கு என்ன பயம்..?

மாணவி: ஒரு ஆசிரியரை எப்படி அடிப்பது என்று தயங்கினேன் மிஸ்.. (நான் கூட ஏன் சார் என்னை இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு நீ ஏன் என்னை அப்போது ஓங்கி அறைய வேண்டியதுதானே என்று அவரும் கேட்கிறார்) ஏதோ தவறு என் மீதுதான் என்பதுபோல சொல்லுகிறீர்களே மிஸ்..???

மிதுன் மனைவி: இது வந்து சாதாரண பிரச்சினை அல்ல, இது ஒரு பெரிய பிரச்சனை, இதை நான் தலைமையாசிரியரும் கொண்டு செல்கிறேன்..

மாணவி: நான் என்ன தவறு செய்தேன் மேடம்...?????

மிதுன் மனைவி: நீ எதற்கு ஒரு ஆசிரியருக்கு மெசேஜ் செய்த.???  ஒரு ஆசிரியருக்கு அனுப்புவதை போலவா நீ மெசேஜ் அனுப்பி இருக்கிறாய்.??? 

மாணவி: அவர்தான் என்னை பெயர் சொல்லி அழைக்க சொன்னார்.? அதனால் தான் நான் அப்படி அழைத்தேன். சார் என்று அழைக்காதே என்று கூறினார்..

மிதுன் மனைவி: சரி நீ இப்போது நிம்மதியாக போய் படுத்து தூங்கு... நாளைக்கு இதை பேசிக்கொள்ளலாம்.. மீரா மேடமிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்வோம்

மாணவி: எப்படி மேடம் என்னால் முடியும்.???

மிதுன் மனைவி: நான் நீ செய்தது தவறு என்றோ அவர் செய்தது சரி என்றோ சொல்லவில்லை.. அவர் செய்தது சரி என்றோ.. நீ செய்தது தப்பு என்றோ சொல்லவில்லை. யார் சொல்வது உண்மை, பொய் என்று எங்களுக்கு தெரியாது. அவரை விசாரிக்கும் போது அவர் ஒன்றைச் சொல்கிறார்.. உன்னிடம் பேசும் போது நீ ஒன்று சொல்கிறாய். எதை வைத்து நாங்கள் முடிவுக்கு வருவது. அதனால் நேருக்கு நேர் வைத்து நாங்கள் கேட்கிறோம். இது எல்லாம் மறைக்க வேண்டிய விஷயமே இல்லை, நேருக்கு நேர் வைத்துக் கேட்டால்தான் உண்மை தெரியும்...  உண்மையிலேயே அவர் தவறு செய்திருக்கிறார் என்றால், அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

மாணவி: ஆமாம் மிஸ்..

மிதுன் மனைவி: என்னுடைய கணவர் தவறு செய்துவிட்டார்.. உடனே அதை மறைக்க வேண்டுமே என்கிற ஆள் நான் அல்ல... தவறு யார் செய்திருந்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும். அவராக இருந்தாலும் சரி.. இது நீயாக இருந்தாலும் சரி.. நீ சொன்னதெல்லாம் உண்மை என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். பொய் எதுவும் சொல்லாமல் உண்மை மட்டும் தான் சொல்லி இருக்கிறாய் என்பதில் சந்தோஷம் தான்.ஆனால் இதில் நீ தவறு மட்டும் சொல்லி இருந்தால், அதனால் பாதிக்கப்படப்போவது நீங்கள் தான். இந்த விஷயத்தில் யார் பொய் சொல்கிறார்களோ அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இதையேதான் அவருடன் நான் சொல்ல போகிறேன். இப்போது என்ன நடந்தது எப்படி நடந்தது என்று அவரிடம் நான் கேட்கப் போகிறேன்.  

மாணவி: மேடம் நானும் லைனில் இருக்கிறேன் மேடம்..

மிதுன் மனைவி: தேவையில்லை.. நீ லைனில் இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நேரில் வரும்போது பேசிக்கொள்ளலாம். நாளைக்கு நீ வரும் போது உன்னிடம் உள்ள ஆதாரத்தை கொண்டுவா.. மேடமிடப் பேசினால்தான் இதற்கு ஒரு சொல்யூஸன் கினைக்கும். அப்போது நீ வைத்திருக்கிறாய் அல்லவா ஸ்கிரீன்ஷாட் எவிடன்ஸ் சாட்ஸ் எல்லாவற்றையும் நீ கொண்டு வா. அதே போல இவரும் இவருடைய சாட்டிங்ஸ் மெசேஜை கொண்டு வரட்டும். மேடமிடம் பேசிவிட்டு  யார் தவறு செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம்.இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது...
 

Follow Us:
Download App:
  • android
  • ios