Asianet News TamilAsianet News Tamil

தனது பரம்பரை வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி.பி..!

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக வழங்கியுள்ளார். 

Singer who donated his ancestral home to Kanchi Math .. SBP
Author
Tamil Nadu, First Published Feb 12, 2020, 6:10 PM IST

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக வழங்கியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழியிகளில் அதிக பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகராக திகழ்ந்து வருகிறார்.  கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றவர்.

 Singer who donated his ancestral home to Kanchi Math .. SBP

நெல்லூரில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சொந்தமான பரம்பரை வீடு திப்பராஜுவாரி, தெருவில் இருக்கிறது. சென்னையில் எஸ்.பி.பாலசும்ப்ரமணியம் பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி விட்டார். அவரது தாயார் அங்கு வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது தாயார் அங்கு மரணமடைந்தார். அங்கு தான் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.  அதன் பிறகு அவரது நெல்லூர் வீடு பல காலமாகப் பூட்டியிருந்தது. இதனை அறிந்து பலரும் அந்த வீட்டை வாங்க முயன்றாலும் எஸ்.பி.பி. இதை யாருக்கும் விற்கவில்லை.

Singer who donated his ancestral home to Kanchi Math .. SBP

இப்போது இந்த வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாகக் கொடுக்கப்போவதாக எஸ்.பி.பி. ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதை தற்போது செயல்படுத்தியுள்ளார். காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை ஒப்படைத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே இந்த தானத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios