உடனே நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சிஆர்பிஎஃப் வீரர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தனது மனைவியின் தாலி செயின் அறுக்கப்பட்டதாக சிஆர்பிஎஃப் வீரர்  வீடியோ வெளியிட்ட நிலையில் உடனே அவரை தொடர்பு கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு விரைவில் குற்றவாளியை பிடிப்போம் என உறுதி அளித்து ஆறுதல் கூறினார். 

உடனே நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சிஆர்பிஎஃப் வீரர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தனது மனைவியின் தாலி செயின் அறுக்கப்பட்டதாக சிஆர்பிஎஃப் வீரர் வீடியோ வெளியிட்ட நிலையில் உடனே அவரை தொடர்பு கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு விரைவில் குற்றவாளியை பிடிப்போம் என உறுதி அளித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் சிஆர்பிஎஃப் வீரர் அதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தில் வசித்து வருபவர் நீலமேகம், இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் துணை ராணுவப்படையான சிஆர்பிஎப் பிரிவில் சேர்ந்தார். தற்போது அவர் காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வருக்கும், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில் தன்னை அ
றிமுகப்படுத்திக் கொண்டவர் அவர், ஐயா நான் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படையில் பணியாற்றி வருகிறேன். எனது கிராமத்தில் வயதான பெற்றோர்கள் எனது மனைவி 10 மாத பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் யாரோ ஒரு மர்ம நபர் என் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை அடுத்து சென்றுவிட்டார். நாங்களே ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறைதான் குடும்பத்தை வந்து பார்க்கிறோம். 

எங்களுக்கு கிடைக்கும் விடுமுறையும் பயணத்திலேயே செலவாகி விடுகிறது. இப்போது எங்கள் குடும்பத்தினர் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திப்பதாக வருகின்ற செய்திகள் என்னை நிம்மதி இழக்க வைத்திருக்கிறது. காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஐயா அவர்கள் என் மனைவியின் தாலி செயினை அறுத்து சென்ற குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும். என் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இப்படி இருந்தால் எப்படி நான் நிம்மதியாக பணியாற்ற முடியும் என்றும், தனது குடும்பத்தினர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபியின் கவனத்திற்கு அது சென்றது. ராணுவ வீரரை தொடர்பு கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு அவரின் குடும்பத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், கவலையில்லாமல் தைரியமாக பணியாற்றுங்கள் என்றும், தவறு இழைத்த குற்றவாளியை விரைவில் பிடிப்போம் என்றும் அவர் ஆறுதல் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் சிஆர்பிஎஃப் வீரர் காவல்துறை டிஜிபிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- 28-4-2022 அன்று நான் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தேன். 

அந்த காணொளியை பார்த்து விட்டு அன்று மாலையே தமிழ்நாடு டிஜிபி ஐயா சைலேந்திரபாபு அவர்கள் எனது மனைவியிடமும் என்னிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று உறுதி அளித்தார். எனது மனைவி முசிறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திருச்சி மாவட்ட எஸ்பி நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என உறுதி அளித்துள்ளார். எனவே ஒட்டுமொத்த காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த். என அவர் கூறியுள்ளார்.