பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஊரடங்கு முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பது மற்றும் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஆலோசனை நடத்தினார். 

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

* கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. 

* தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

*  நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

* கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 

* தேவையான தளர்வுடன் தமிழகத்தில் ஊரடங்கை பாதுகாப்பாக அமல்படுத்தி வருகிறோம். 

* சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 46 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

* கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

* கொரோனாவை தடுக்க, மக்களுக்கு சித்த மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. 

* கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 73 சதவீதத்திற்கு மேல் உள்ளது. 

* கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* கொரோனா காலக்கட்டத்திலும் ரூ.30,500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 67,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

* இந்தியாவிலேயே கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது. 

* கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன.

* தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

*  பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.