விகாஸ் துபே மற்றும் அவரது கும்பலுக்கு தகவல் கொடுத்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் கே.கே.ஷர்மாவை சிறப்பு போலீஸ் படை கைது செய்துள்ளது.கைது செய்யப்பட சர்மா தனக்கும் தன்னுடைய மனைவி வினிதா சிரோஹிக்கும் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில்  மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட விகாஸ் துபே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கான்பூரில் உள்ள சவுபிபூர் காவல் நிலையத்தில் விகாஸ் துபே மீது கொலை கொலை முயற்சி என 60 வழக்குகள் உள்ளன.சவுபிபூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால், குற்றச்செயல்கள் தொடர்பாக கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக விகாஸ் துபேயின் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது.அவர் பல முறைகள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுவரை அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு கான்பூரில்  போலீஸார் நடத்திய சோதனை நடத்தியது.இது தொடர்பாக விகாஸ் துபே மற்றும் அவரது கும்பலுக்கு தகவல் கொடுத்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் கே.கே.ஷர்மாவை சிறப்பு போலீஸ் படை கைது செய்துள்ளது.கைது செய்யப்பட சர்மா தனக்கும் தன்னுடைய மனைவி வினிதா சிரோஹிக்கும் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

"விகாஸ் துபே மற்றும் அவரது உதவியாளர்களை என்கவுண்டர் செய்ததைப் போலவே சிறப்பு போலீஸ் படை கொன்று விடும் என்ற அச்சத்தால் அவர் தனது உயிருக்கு அஞ்சுகிறார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.'ஒரு சுயாதீன நிறுவனம் அல்லது சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும். மனுதாரர்கள் தங்களது அடிப்படை வாழ்க்கை உரிமையைப் பாதுகாக்கவும், சிபிஐ அல்லது வேறு எந்த சுயாதீன விசாரணை நிறுவனத்திற்கும் விசாரணையை மாற்றக் கோரி இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு நியாயமான விசாரணை மற்றும் விசாரணைக்கு முயல்கின்றனர்.' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது .