கடவுள் ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் சர்ச்சையை கிளப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக அவரது இல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாள பிரதமர் ஒலி, ’’இந்தியா கலாச்சார ஒடுக்குமுறை மற்றும் அத்துமீறலில் ஈடுபடுகிறது. ராமரின் பிறப்பிடமாக கோடிக்கணக்கான இந்துக்களால் நம்பப்படும் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில் அவரது பிறப்பிடம் இல்லை. காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம். நாங்கள் சீதாவை இளவரசர் ராமருக்கு திருமணம் செய்து கொடுத்ததாக நம்புகிறோம். ஆனால், இளவரசரும் அயோத்தியை சேர்ந்தவரை இந்தியாவை சேர்ந்தவர் அல்ல. அந்த அயோத்தி என்பது பிர்குன்ஜ் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். தலைநகர் காட்மண்டுவில் இருந்து 135 கி.மீ தொலைவில் இந்த கிராமம் உள்ளது. 

நாங்கள் கலாச்சார ரீதியாக கொஞ்சம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன என்று நேபாள செய்தி வளைதளமான சீதோபதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், நேபாளப் பிரதமர் ஒலி, உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது. இந்தியாவில் இல்லை. கடவுள் ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல. உத்தர பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து 135 கி.மீ தொலைவில் உள்ள அயோத்தி என்பது ஒரு நகரம்’’ என அவர் தெரிவித்துள்ளார் 

ஏற்கனவே இந்தியா - நேபாளம் இடையே சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பிரதமர் ஒலி இந்த புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.