உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வியூகத்தை கண்டு ஆளும் அதிமுக தரப்பு பீதியில் பேதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதியும், 2-வது கட்டமாக டிசம்பர் 30-ம் தேதியும் நடக்கிறது. இதனால், அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ளது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை எப்படி எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அதில், உள்ளாட்சி தேர்தலில் எந்த மாவட்டங்களில் அறுபது சதவிகித்திற்கு மேல் திமுக வெற்றி பெறுகிறதோ அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் பதவி வழங்கப்படும். மேலும், கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுக மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் பம்பரம் போல் சூழன்று வருகின்றனர். 

மேலும், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளால் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் இதை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திமுகவின் இந்த வியூகத்தை கண்டு ஆளும் எடப்பாடி அரசு அதிர்ச்சியில்உள்ளதாக கூறப்படுகிறது.