திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் தான் கைதானார் என்ற ஆதாரம் இன்னும் வெளியிடவில்லை. திமுக கட்சியை விட இந்த ஆதாரத்தை வெளியிடுவதில் (மிசா தியாகி என்று நாடகமாடிய) கருணாநிதி குடும்பத்தினர் தான் அதிகம் பொறுப்புள்ளது. ஆக ஒன்று ஆதாரத்தை வெளியிடுங்கள் இல்லை திமுக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள் என மாரிதாஸ் கூறியுள்ளார். 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்கிற விவாதம் கடந்த சில நாட்களாகவே சூடுபறக்கிறது. 1975-ம் ஆண்டும் தொடர்ந்து அடுத்த வருடமும் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது பலர் சிறை சென்றனர். அப்படி திமுக தலைவராகவும் முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினும் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆனால், அவர் மிசா கைதியாக சிறைக்கு செல்லவில்லை. மிசா சட்டம் அமலில் இருந்த போது சிறைக்கு சென்றார். அவரை மிசா தியாகியாக கருத முடியாது.  அப்படி அவர் சென்றிருந்தால் அதற்கு உண்டான ஆதாரத்தை சமர்பிக்கவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அறிக்கையின் மூலம் திமுக தலைமை பதிலளித்து வந்தது. அடுத்து, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் விவகாரத்தில் அடிபட தொடங்கியதால் மிசா கைதி விவகாரம் அடங்கிபோனது. 

இந்நிலையில், மிசா விவகாரத்தை மீண்டும் கிளப்பி மரிதாஸ் ஆதாரம் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் " ஸ்டாலின் மிசாவில் தான் கைதானார் என்ற ஆதாரம் இன்னும் வெளியிடவில்லை திமுக. திமுக கட்சியை விட இந்த ஆதாரத்தை வெளியிடுவதில் (மிசா தியாகி என்று நாடகமாடிய)கருணாநிதி குடும்பத்தினர் தான் அதிகம் பொறுப்புள்ளது. ஆக ஒன்று ஆதாரத்தை வெளியிடுங்கள் இல்லை திமுக தலைவர் பதவி விலகுங்கள் என்று கூறியுள்ளார்.