Nithyanandha | 40-ம் வயதில் நாடு நாடாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு நாட்டையே கட்டிட்டேன்

காவல் துறையால் பல வழக்குகளில் தேடப்படுபவர் நித்தியானந்தா. இவர் ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கி அங்கு குடியிருப்பதாக வீடியோ வாயிலாக கூறி வருகிறார். அவ்வப்போது வீடியோ வெளியிட்ட தனது இருப்பை நித்தியானந்தா வெளிப்படுப்பத்தி வருகிறார். அதில், சில நேரம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் கைலாசா நாட்டை உருவாக்கியது குறித்து நித்தியானந்தா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ‘என்னோட வாழ்க்கையை பாருங்கள். இளமை பருவத்தில் வீடு வீடாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு வீடு கட்டினேன். 20-ம் வயதில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு தெருவையே கட்டிவிட்டேன்.

30-ம் வயதில் ஊர் ஊராக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு ஊரையே கட்டிட்டேன். 40-ம் வயதில் நாடு நாடாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு நாட்டையே கட்டிட்டேன்’ என நித்தியானந்தா கூறியுள்ளார். ஜெய் பீம் பட சர்ச்சை குறித்து பதிலளித்த அவர், வன்னியக்குடிகளை இழிவுபடுத்தி தான் சூர்யா தனது குடும்பத்தினரின் வயிற்றைக் கழுவ வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நித்தியானந்தா நல்லவரோ இல்லை கெட்டவரோ இது ஒரு புறம் இருக்க , வன்னிய குல க்ஷத்ரிய மக்களுக்கு ஒரு இழிவு எனத்தெரிந்ததால் எங்கேயோ இருந்து கொண்டு ஜெய்பீம் படக்குழுவினர் மீது தவறு உள்ளது என கண்டித்ததால் இங்குள்ளவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என பலரும் நித்யானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.