shocking reasons behind rajini political entry

போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற ரஜினியின் அரசியல் பிரவேச போர் முழக்கம், தமிழக அரசியலில் அத்தனை தகிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற டிபேட் பட்டி தொட்டி எல்லாம் படபடக்க... இல்லை...! இல்லை...! இவை அனைத்தும் 2.0 படத்திற்கான ஹம்பக் என்கிற விமர்சனமும் பிரதானமாக முன்வைக்கப்படுகிறது.

சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்கிற மாதிரி, தான் உண்டு தன் வேலை உண்டுனு திரைப்படத் துறையில் பிஸியாக இருந்த ரஜினியை விமர்சனம் செய்தே அரசியலுக்கு வரவழைத்து விட்டனர் என்று கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்...

ஈழத் தமிழர்களுக்காக லைக்கா நிறுவனம் கட்டிய வீடுகளை பயனாளிகளுக்கு அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு ரஜினி செல்ல இருந்தார்.

ஆனா இங்க இருக்கிற அரசியல்வாதிங்க, போகாதீங்க, அப்படி மீறிப் போன தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்குச் சமம்னு கூறி அவரது பயணத்தை தடுத்துட்டாங்க. இதனால தலைவர் கொஞ்ச நாளாவே கடுப்பாகத் தான் இருந்தாரு...

"நேத்து கட்சி ஆரம்பிச்சவங்க எல்லாம். உங்கள மிரட்டராங்க. பயணத்தை தடுக்கறாங்க.. லட்சக் கணக்கான ரசிகர்களை வைச்சு இருக்கிற நீங்க. அவர்களின் நிர்பந்தத்திற்கு பணிந்து இலங்கை பயணத்தை ரத்து செய்தது சரியாப்படல.. இப்படியே விட்டா.. நாளைக்கு ஒரு படத்தில நடிச்சாலும், அதுக்கும் அவங்க சிக்கல் உண்டாக்குவாங்க.. 

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு கட்சி தொடங்குறது தான்." இப்படி ரஜினியின் உடனிருக்கும் ஒருவர் அளித்த தவிர்க்க முடியாத ஆலோசனை தான் புதுக்கட்சி மூடுக்கு தலைவர தள்ளியிருக்குனு காரணங்களை அடுக்குகின்றனர் ரசிகர்கள்....

திருமண மண்டபத்தை இடித்தார்கள் என்பதற்காக அரசியலில் குதித்தேன் என்றார் விஜயகாந்த்..... இலங்கைப் பயணத்தை தடுத்ததற்காக அரசியலில் நுழைந்தேன் என்று ரஜினி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை....

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஏன்று கூறப்படுகிறது. முன்பு தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம் திறந்து பேசிய ரஜினி, கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக அரசியலில் ஜாம்பவான்கள்.

அவர்கள் இருக்கும் வரை அரசியல் களம் கண்டு காலூண்றுவது என்பது மிகக் கடினம். வெற்றிடம் ஏற்பட்டால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றாராம்.

இதன்படி தற்போது ஜெயலலிதா உயிரிழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அண்ணா, காமராஜர், கக்கன், போன்ற தன்னலமில்லா மாபெரும் அரசியல் தலைவர்களைக் கண்ட தமிழம், இனி தன்னலத்தாலும், வாய்ப்புகளாலும் கட்டமைக்கப்பட இருக்கும் அரசியலை காண வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது சாபக்கேடு.....