Asianet News TamilAsianet News Tamil

உடனே வாங்க... ஓபிஎஸ் ‘திடீர்’ டெல்லி பயணம்.... பரபரக்கும் அரசியல் பின்னணி...!

நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Shocking political reason behind  O Pannerselvan sudden delhi travel
Author
Chennai, First Published Jul 25, 2021, 4:15 PM IST

அதிமுகவில் இரட்டை தலைமை இருப்பது குறித்த புகைச்சல், சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வெகுவாக பற்றி எரிய ஆரம்பித்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நடந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓவராக சப்போர்ட் செய்த போதும் எடப்பாடி பக்கமே அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் அவரையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாம் என இறுதி முடிவெடுக்கப்பட்டது. 

Shocking political reason behind  O Pannerselvan sudden delhi travel

அதுமட்டுமின்றி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஆற்றிய சேவைகளை எடுத்துரைத்து ஓட்டு கேட்க முடியும் என்பதால் பல அமைச்சர்களும் எடப்பாடி பக்கமே சப்போர்ட்டாக நின்றனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான சர்ச்சைகள் ஓபனாக வெளியேத் தெரிய ஆரம்பித்தது. தனித்தனி பெயரில் அறிக்கை வெளியிடுவது, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான போட்டி என பிரச்சனைகள் உருவானது. அதற்கு முன்னதாகவே சசிகலா தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியதால் சுதாரித்துக் கொண்ட இபிஎஸ் - ஓபிஎஸ் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்த தீர்மானித்தனர். 

Shocking political reason behind  O Pannerselvan sudden delhi travel

தினந்தோறும் அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். அப்படி சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் நபர்களை கட்சியிலிருந்து நீக்குவது, சசிகலாவிற்கு எதிராக மாவட்டந்தோறும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தியது என அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினர்.  சமீபத்தில் சசிகலா வெளியிட்ட ஆடியோ ஒன்றில் தான் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரையும் ஒன்றாக அனுசரித்து கட்சியை வழிநடத்த நினைத்ததாக பேசியதும், ஓபிஎஸை முதலமைச்சராக அமர்த்திருப்பேன் என்றதும் மீண்டும் சர்ச்சையை ஸ்டார்ட் செய்தது. 

Shocking political reason behind  O Pannerselvan sudden delhi travel

ஆடியோவில் இருந்து அப்டேட்டாகி தொலைக்காட்சி பேட்டிகளில் பங்கேற்று வரும் சசிகலா, தனக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் இடையிலான நட்பு குறித்து பேசி வருவது அதிமுக தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் உளவுத்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொடுத்த தகவலின் படி சசிகலாவிற்கு ஆதரவு பெருகுவதாக கூறப்படுகிறது.  ‘அந்த அம்மாவுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கு... உடனே கிளம்பி டெல்லி வாங்க’ என அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்தே ஓபிஎஸ் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. 

Shocking political reason behind  O Pannerselvan sudden delhi travel

நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், சசிகலாவை ஓரங்கட்டுவதற்கான வியூகங்கள் குறித்தும், தமிழகத்தில் திமுக அரசு அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios