ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் காங்கிரஸ், அதில் தத்தளித்து இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்

‘ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் காங்கிரஸ், அதில் தத்தளித்து இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்’ என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ட்வீட் ஒன்றிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலுக்கு ட்வீட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருப்பூரில் நேற்றைய தினம் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். மேலும் மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கலந்து கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களும் திறக்கப்பட்டதாக தெரிகிறது. இதை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன! நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்!’ என தெரிவித்துள்ளார்.

பாராட்டுவது போல் பாராட்டி கட்சி வளரவே இல்லை என்பதை ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியிருந்தார். இதற்கு பாஜக தலைவர் கே.அண்ணாமலை பதிலுக்கு ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் உங்கள் காங்கிரஸ் கட்சி.

Scroll to load tweet…

அதிலே தத்தளித்து, இலக்குத் தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று உங்களுக்கு தெரியும். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…