இராமர் ஆரியர், அவரை வணங்காதே, தமிழ் கடவுள் முருகனை வணங்கு என்றான். இன்று முருகனை அவமானப்படுத்துகிறான். நாளை உன் குலதெய்வத்தையும் அசிங்கமாய் பேசுவான் எனக்கூறி ட்விட்டரில்  #பெரியாராவது_மயிராவது என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

 

கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டது இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை கச்சைகட்டி ஆடிய போதே கோவை அருகே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. இதனால் பகுத்தறிவு ஜீவிகள் கொந்தளித்தனர். அதேபோல் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருகோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தி உள்ளனர்.

இதனால், இந்து உணர்வாளர்களுக்கும், பகுத்தறிவு பண்பாளர்களுக்கும் இடையே கடும் முட்டல் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பெரியாராவது_மயிராவது என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் பலரும் பெரியாருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

அதில், ‘’ஈ.வே.ராமசாமி கொள்கைப்படி பார்த்தால் ஒரு கல்லின் மீது காவி சாயம் ஊற்றப்பட்டுள்ளது. இந்த நிற சாயத்தை தன்மேல் ஊற்றகூடாது என அந்த கல் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், காவி சாயத்தை ஊற்றியது அவமதிப்பு கணக்கில் வராது. இதில் தவறேதுமில்லை’’என்றும், ‘’என்னோட மதத்தின் நம்பிக்கைகள மட்டும் இன்னமும் கிண்டல், அவதூறு செய்வது இந்த பெரியார் உருவாக்கிய கூட்டம்தான். இவர்கள் கடவுளையே தவறாக பேசுவார்களாம். ஆனால், இந்த பெரியார் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராம். பிடிக்கவில்லை என்றால் ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாருங்கள் எனவும் கூறி உள்ளனர். 

 

மற்றொருவர், ‘’இராமர் ஆரியர், அவரை வணங்காதே, தமிழ் கடவுள் முருகனை வணங்கு என்றான். இன்று முருகனை அவமானப்படுத்துகிறான். நாளை உன் குலதெய்வத்தையும் அசிங்கமாய் பேசுவான். தமிழா இவர்களை புரிந்துகொள்;  அன்னிய மதங்களை நம்மிடம் திணிப்பதே இவர்களின் ஒரே இலக்கு’’ என்று பெரியாரிஸ்டுகள் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.