ஐந்து சிறுமிகளை ஏமாற்றி அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பலோட் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பலோட் காவல் நிலைய கண்காணிப்பாளர் ஜிதேந்திர மீனா கூறுகையில், ‘’65 வயதான இந்த முதியவர் வீட்டின் அருகில் விளையாடிய குழந்தைகளில் 8 வயது முதல் 11 வயது வரை உள்ள சிறுமிகளை வீட்டிற்கு டிவி பார்க்க அழைத்துள்ளார்.

சிறுமிகளும் ஏமார்ந்து வீட்டிற்குள் செல்ல டிவி பார்க்க வைத்து விட்டு ஒவ்வொரு குழந்தையாக தனி தனியாக அழைத்து அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு ஒரு குழந்தை அதில் சோர்வாக அமர்ந்திருப்பதை அவரது தாயார் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது அந்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்ற சிறுமிகளையும் விசாரிக்க அனைவரும் நடந்ததை கூறியுள்ளனர். இது குறித்து பெற்றோர் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர். ஒரே நேரத்தில் இந்த கொடுமைகளை முதியவர் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.