திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு வீட்டில் இருந்த படியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவிரி மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டிலேயே மருத்துவமனைகள்  இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கருணாநிதியின் உடல் நிலை மிக சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாகவும், காய்ச்சலுக்கான மருந்தை அவரது உடல் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுக தொண்டர்க்ள மிகுந்த சோகத்துடள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி சென்ற கனிமொழி, பாஜக-காங்கிரஸ் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இன்று காலையில் டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்துட்டார். அதேபோல, மதுரையிலிருந்து அழகிரியும் சென்னைக்கு வந்துவிட்டார். இந்நிலையில், பலவருடங்களுக்குப் பின் மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின் மற்றும் அழகிரியை இணைக்கும் முயற்சியில் இறங்கியது செல்வியும், கனிமொழியும் கட்சி மற்றும் குடும்ப விவகாரங்களுக்கு டீல் பேசி முடிக்கிறார்களாம்.

இதற்கு முன்பாக ஸ்டாலினை பலகீனப்படுத்த, அழகிரியைக் கொண்டு ' கலைஞர் திமுக ' எனும் கட்சியை துவக்க வைப்பது உட் கட்சியிலேயே பலர் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வேலையை 2016 தேர்தலின் போதே இந்த திட்டத்தை செயல்படுத்த முயன்றுள்ளார்கள். அப்போது, " தலைவர் கலைஞர் இருக்கும் போது திமுகவை பிளவுப்படுத்த மாட்டேன். அவர் இருக்கும் வரை அப்படி ஒரு காரியத்தை செய்யமாட்டேன் என உறுதியாக இருந்தார் அழகிரி. அதனால் தான் கனிமொழியைக் கூட தன்னோடு சேர்த்துக் கொள்ளாமல் விலகியே இருந்தார்.

 இந்நிலையில், கருணாநிதி உடல்நிலை குன்றி இருக்கும் நிலையில் மதுரையிலிருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்துள்ள அழகிரியுடன் கனிமொழியும், செல்வியும் ஸ்டாலினுடன் பேசவைக்க முயற்சித்து வருகின்றனர். தற்போது கோபாலபுரத்தில் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து விவாதிக்கவிருக்கிறார்கள். குடும்பத்தினர் ஒன்று கூடி பேசுகையில் அழகிரியை திமுகவில் சேர்ப்பது பற்றியும் சொத்துக்கள் டீல் பேசுகிறார்களாம் , இந்த பஞ்சாயத்தில் அழகிரியின் அபிலாசைகளை ஸ்டாலின் நிறைவேற்ற முரண்பட்டால், கலைஞர் திமுக' உருவாவது உறுதி என அழகிரியின் விசுவாசிகள் மத்தியில் சலசலக்கிறது.