Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் முதல் எழுத்து 'ஸ' வை மாற்றியமைக்க குழு அமையுங்க.. முதல்வரை வாண்ட்டா வம்பிழுக்கும் அண்ணாமலை.

முதல்வரின் முதலெழுத்து 'ஸ' வுக்கு  மாற்று என்ன என்பதை கண்டுபிடிக்க உடனே தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  திமுகவினரை கிண்டலடித்துள்ளார்.

 

Set up a team to change Stalin's first letter 'S'.. Annamalai criticized dmk.
Author
Chennai, First Published May 16, 2022, 7:32 PM IST

முதல்வரின் முதலெழுத்து 'ஸ' வுக்கு  மாற்று என்ன என்பதை கண்டுபிடிக்க உடனே தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  திமுகவினரை கிண்டலடித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட தமிழ் தாய் புகைப்படத்தில் 'ஸ  என்ற வடமொழி எழுத்து  இடம் பெற்றிருந்ததை விமர்சித்து திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு  ட்வீட் செய்திருந்த நிலையில் அண்ணாமலை இவ்வாறு விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் பாஜகவுக்கும் அதிமுகவுக்குமான மோதல் அதிகரித்துள்ளது. அதிலும் இந்தித் திணிப்பு விவகாரத்தில் இரு தரப்புக்கும் கருத்து மோதல் கடுமையாக இருந்து வருகிறது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை தொடர்பு மொழியாக பயன்படுத்தலாம், என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஓவியர் சந்தோஷ் நாராயணன் தமிழணங்கு தமிழ்த்தாய்  என்ற பெயரில் வரைந்த ஓவியத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்டிருந்தார். அந்த படம் பெரும் பேசு பொருளாக மாறியது. அதில் தமிழ் தாய் கருப்பு நிறத்தில் இருப்பதை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Set up a team to change Stalin's first letter 'S'.. Annamalai criticized dmk.

இந்நிலையில் அந்த புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதற்கு மாற்றாக தமிழன்னை என்ற பெயரில் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அந்த ஓவியத்தின் பின்னணியில் தமிழ் எழுத்துக்களுடன் 'ஸ' என்கிற சமஸ்கிருத எழுதும் இடம்பெற்றிருந்தது. எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்ற ஹாஸ்டேக்குடன் ஓவியத்தை அண்ணாமலை பகிர்ந்திருந்தார்.  அப்படத்தை மேற்கோள்காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழணங்கை போற்றுகிறோம் என்ற பெயரில் வடமொழி எழுத்துக்கள் இணைத்து படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தான் உண்மை முகத்தை காட்டி விட்டது. இதை தான்  தொழுது கொள்ளும் படையொடுங்கும் என வள்ளுவர் அடையாளம் காட்டி போனார் என விமர்சித்திருந்தார்.

Set up a team to change Stalin's first letter 'S'.. Annamalai criticized dmk.

தங்கம் தென்னரசுவின் இந்த பதிவுக்கு  ஆதரவு எதிர்ப்பு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில்  தங்கம் தென்னரசுவுக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை மேலும்  ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் தமிழ் தமிழ் என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்து 'ஸ' இடம்பெற்றதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது. 'ஸ' ஷா வை நீக்கி அதற்கு மாற்று எழுத்து கண்டுபிடிக்க தமிழக அரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த  பதிவுக்கு பாஜகவினர் ஆதரவும், திமுகவினர் எதிர் கருத்துக்களையும் கூறி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios