ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு - செந்தில்முருகன் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.இந்த தேர்தலில் பாஜக போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க..ஓபிஎஸ் எடுத்த கடைசி அஸ்திரம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த பன்னீர் அணி !!
அதோடு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் பாஜக சார்பில் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை என்பது பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உறுதிப்படுத்தி இருந்ததே என்று சொல்ல வேண்டும். திடீரென இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுவதாக அறிவிக்க தமிழக பாஜக சற்று பின்வாங்கியது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2001 மற்றும் 2016-ம் ஆண்டு என இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள கே.எஸ்.தென்னரசு தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதிமுக இபிஎஸ் தரப்பு தற்போது தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பு செந்தில்முருகன் என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..தே.ஜ கூட்டணிக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி.. டெல்லிக்கு போகும் அண்ணாமலை - டெல்லியின் பிளான் கைகொடுக்குமா?