எடப்பாடி நீ ஆட்சியை விட்டு விலகு... ஸ்டாலின் முதல்வராகி 15 நாட்களில் பிரச்னைகலை தீர்த்து வைப்பார் என அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கடுமையாக சாடியுள்ளார். 

கரூரில் தண்ணீர் கேட்டு போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ‘தாகத்தை தீர்க்கக்கூடிய பணிகளை நாம் செய்யவேண்டும் என்று தளபதி ஆணையிட்டு இருக்கிறார். நிச்சயம் அதனை நாம் செய்து முடிப்போம். நமது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கி கரூர் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்ப்போம். ’ஏண்டா குழந்தை இல்லையா’ எனக் கேட்டார்களாம். அதற்கு அவன் ‘பக்கத்து வீட்டுக்காரன் சரியில்லை’ என பதில் சொன்னானாம். அதைத்தான் இப்போது அமைச்சர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். 

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் திட்டத்தை கொண்டு வரவில்லை அதனால் தான் எட்டு ஆண்டுகள் கழித்து தண்ணீர் பஞ்சம் வந்து விட்டது என்கிறார்கள். ஒண்ணே ஒண்ணு சொல்றேன். எடப்பாடி நீ ஆட்சியை விட்டு விலகு... ஸ்டாலின் முதல்வராகி 15 நாட்களில் முக ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்து வைப்பார். தங்குதடையின்றி எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும். அடிப்படை வசதிகளை ஸ்டாலின் நிரைவேற்றிக் கொடுப்பார். 

மத்திய அரசுக்கு அடிபணியாமல் தமிழ் நாட்டு உரிமைகளை மீட்டெடுப்பார். 28 ம் தேதி சட்டமன்றம் தொடங்க இருக்கிறது. அப்போது சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினின் குரல் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தப்போகிறது. தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும்’’ என அவர் தெரிவித்தார்.