Asianet News TamilAsianet News Tamil

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த செந்தில் எம்.பி., ரிசல்ட் நேரத்தில் திமுகவுக்கு இப்படியொரு அவமானமா..?

தர்மபுரி தொகுதி எம்.பி., டாக்டர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில் ஒருவர் செய்த நகைப்புக்குரிய விஷயத்தை ஊதி பெரிதாக்கியதன் மூலம் இன்று இந்திய அளவில் ட்விட்டர் களமே அந்த விஷயத்தை உற்று நோக்கும் அளவிற்கு செய்துவிட்டார். 

Senthil MP, who blew up the idle union, is such an insult to DMK at the time of the result
Author
Tamil Nadu, First Published Apr 29, 2021, 11:08 AM IST

தர்மபுரி தொகுதி எம்.பி., டாக்டர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில் ஒருவர் செய்த நகைப்புக்குரிய விஷயத்தை ஊதி பெரிதாக்கியதன் மூலம் இன்று இந்திய அளவில் ட்விட்டர் களமே அந்த விஷயத்தை உற்று நோக்கும் அளவிற்கு செய்துவிட்டார்.

 Senthil MP, who blew up the idle union, is such an insult to DMK at the time of the result

தர்மபுரி தி.மு.க எம்.பி.செந்தில்குமார் மருத்துவம் படித்தவர், சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழித்து எந்நேரமும் உயிர்ப்புடன் இருப்பவர். இவரை தொடர்பு கொள்ள இவரின் அலுவலகமோ, மருத்துவமனையோ, வீட்டிற்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை ட்விட்டரில் இவரின் ஐடி'யை குறிபிட்டு தொடர்புகொண்டால் போதும் உடனே என்னவென்று கேட்பார் அந்தளவிற்கு சமூக வலைதளத்தில் எம்.பி பணி, மருந்துவ பணி, தன் குடும்பம் என அனைத்தையும் இரண்டாம் கட்டமாக வைத்துவிட்டு சமூக வலைதளமே முழு மூச்சாக இயங்கி வருபவர். 

 

இப்படி முழுமூச்சாக இயங்குபவரை அவ்வபொழுது சிலரின் ஐடிக்கள் கோபமடைய செய்துவிடுகின்றன. இவருக்கு எப்படி அனைத்து விதமான கருத்துக்கள் கூற உரிமை உள்ளதோ அதுபோல் அனைவருக்கும் அனைத்து விதமான கருத்துக்களை கூற உரிமை உள்ளது என மறந்து இவர் கோபப்பட்டுவிடுவார். இதுபோல் நேற்று முன்தினம் ஒரு ஐடியில் தி.மு.கவின் மறைந்த தலைவர் கருணாநிதி பற்றி ஒருவர் விமர்சனத்தை வைத்திருந்தார். உடனே பொங்கியெழுந்த எம்.பி.செந்தில்குமார் அதனை சைபர் க்ரைம் போலீசாருக்கு குறிப்பிட்டு புகார் அளித்துவிட்டார். 

 

உடனே விமர்சனம் செய்தவரும் அதனை தவறு என ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால் இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இதைவிட கேவலமான விமர்சனங்களை இவர் பின்தொடரும் அல்லது இவரை பின்தொடரும் தி.மு.க சார்பு ஐடிக்கள் முன்வைத்த பொழுது பேசாமல் கடந்து சென்றவர் தற்பொழுது பொங்கியெழுந்த காரணம் புரியவில்லை. இதனையடுத்து ட்விட்டரில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நெட்டிசன்கள் எம்.பி.செந்தில்குமார் ஐடியையும் குறிப்பிட்டு நேற்று இரவு முதலே #கூலரும்_கூத்தியாளும் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இவரும் சளைக்காமல் தான் ஒரு எம்.பி என்பது கூட நினைவில்லாமல் காலை முதல் அனைத்து கமெண்ட்களுக்கும் மறுபதிவு செய்துகொண்டிருக்கிறார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios