Asianet News TamilAsianet News Tamil

கோபேக்மோடி எழுதிய செந்தில் பாலாஜி... #ஐந்து_கட்சி_அமாவாசை ஆக்கி அட்ராசிட்டி..!

மதிமுக, திமுக, அதிமுக, அமமுக, மீண்டும் திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியை மையப்படுத்தி ஐந்துகட்சி அமாவாசை என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Senthil Balaji written by Kobekmodi ... Five Party Monthly Aggression
Author
Tamilnadu, First Published Nov 20, 2020, 6:17 AM IST

மதிமுக - திமுக - அதிமுக - அமமுக - திமுக கட்சிகளுக்கு மாறியதால் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை #ஐந்து_கட்சி_அமாவாசை என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இப்படியிருக்க கூட்டணி மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக வரும் 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வர இருக்கிறார். அதேவேளையில், தடைகளை தாண்டி பாஜகவின் வேல்யாத்திரையும் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 24ம் தேதி கரூரில் பாஜக சார்பில் வேல்யாத்திரையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த சூழலில், கரூர் மாவட்டத்தில் கோபேக் மோடி என்னும் வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் திமுகவினரால் ஒட்டப்பட்டுள்ளது. இது பாஜகவினருக்கு கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.Senthil Balaji written by Kobekmodi ... Five Party Monthly Aggression

இதையடுத்து, கோபேக் மோடி  வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்களை ஒருவாரத்தில் திமுகவினரே அழிக்க வேண்டும் என்றும், இல்லையேல், நாங்கள் அதனை அழிப்போம் என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். பாஜக சார்பில் ஒட்டப்படும் சுவர் விளம்பரங்களில், 'ஐந்து கட்சி அமாவாசை மற்றும் சுடலை ராஜா' என்னும் பெயர்கள் இடம்பெறும் என்றும், நீங்க செய்த சாதனையை வைத்து ஓட்டு கேளுங்கள், பிச்சை எடுக்காதீங்க என்று 5 கட்சிகளுக்கு தாவி, தற்போது திமுகவில் இருக்கும் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு வார்னிங் கொடுத்தார்.Senthil Balaji written by Kobekmodi ... Five Party Monthly Aggression

இந்நிலையில், மதிமுக, திமுக, அதிமுக, அமமுக, மீண்டும் திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியை மையப்படுத்தி ஐந்துகட்சி அமாவாசை என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios