Asianet News TamilAsianet News Tamil

கரூர் தொகுதி யாருக்கு? செந்தில் பாலாஜியால் அரண்டு கிடக்கும் திமுக பிரமுகர்கள்!

கடந்த தேர்தலில் போட்டியிட்ட ம. சின்னசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.பி. பழனிசாமியின் மகன் சிவராமன், செந்தில் பாலாஜிக்கு முன்பு கரூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கரூர் தொகுதியைக் கைப்பற்றி எம்.பி. ஆகும் கனவில் உள்ளார்கள்.
 

Senthil Balaji willing to contest in Karur
Author
Tamil Nadu, First Published Mar 7, 2019, 9:28 AM IST

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சீட்டு கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு கொடுத்திருப்பதால், எம்.பி. கனவில் உள்ள திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.Senthil Balaji willing to contest in Karur
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்து தினகரன் அணிக்கு செந்தில் பாலாஜி சென்றதால், அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. திடீரென அமமுகவில் இருந்து திமுகவுக்கு தாவி தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி, 40 நாட்களில் கரூர் மாவட்ட பொறுப்பாளராக உயர்ந்து உள்ளூர் திமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 2016-ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்ததால், 21 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. Senthil Balaji willing to contest in Karur
ஆனால், திடீரென அவர் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு சீட்டு கேட்டு விண்ணப்பித்ததால், உள்ளூர் திமுக பிரமுகர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட ம. சின்னசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.பி. பழனிசாமியின் மகன் சிவராமன், செந்தில் பாலாஜிக்கு முன்பு கரூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கரூர் தொகுதியைக் கைப்பற்றி எம்.பி. ஆகும் கனவில் உள்ளார்கள்.Senthil Balaji willing to contest in Karur
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் விருப்ப மனு தாக்கல் கரூர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை சொல்லி செந்தில் பாலாஜி விருப்ப மனு அளித்தாரா அல்லது சுய விருப்பத்தின் பேரில் அளித்தாரா என்ற பட்டிமன்றம் கரூர் திமுகவில் ஜரூராக நடந்துவருகிறது. 
இதுபற்றி திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “செந்தில் பாலாஜி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவாரா என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார். தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை. இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தலைவர் உள்ளார். வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரையே தலைவர் தேர்வு செய்வார்” என்கின்றன.
கூட்டி, கழித்துப் பார்த்தால் ஏதோ இடிக்கிறது... கரூரில் செந்தில் பாலாஜி ராஜாங்கம்தான்!

Follow Us:
Download App:
  • android
  • ios