உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக முதல்வர் ஸ்டாலினை உருவாக்க வேண்டும். 

கரூரில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது, ‘’தமிழகம் முழுவதும் பரவலான வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக கரூரில் விரைவில் ஐ.டி பார்க், கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கை திமுக உறுப்பினராக சேர்க்க வேண்டும். முழுமனதோடு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக முதல்வர் ஸ்டாலினை உருவாக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கை திமுக உறுப்பினராக சேர்க்க வேண்டும். முழுமனதோடு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமாகும். வாக்காளர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் முக்கியமாகும். திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். குறிப்பாக புதிய உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக்கூடாது.

முழு விருப்பத்தோடு அவர்களை உறுப்பினராக சேர்த்தால் தான் அது திமுகவிற்கு வாக்குகளாக மாறும். உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மக்களவை தேர்தல் வர இருக்கிறது. பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும். திமுக இளைஞரணி செயலா ளர் உதயநிதி அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் எடுத்துக்காட்டாக செயல்படுகி றார். அவர் அமைச்சராக வரவேண் டும் என மக்கள் எதிர்பார்க்கின் றனர். எங்களது விருப்பமும் அதுவாகவே உள்ளது.

திமுக சார்பில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 502 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப் பேற்ற 6 மாதங்களில் 202 வாக்கு றுதிகளை முதல்வர் நிறைவேற்றி யுள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு 100 சதவீத வெற்றியை மக்கள் தருவார்கள். ஆட்சியர், காவல் கண்காணிப் பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரி களை ஒருமையில் பேசும் முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்’’ என அவர் தெரிவித்தார்.

சக்தி வாய்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கூறி திமுகவினரை திக்குமுக்காட வைத்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை கிங் மேக்கராக உருவாக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களிடம் செந்தில் பாலாஜி பேசியுள்ளது உடன் பிறப்புகளை உற்சாகமடைய வைத்துள்ளது.