கலைகட்டி வரும் கரூரில் செந்தில் பாலாஜி திமுகவில் இணையும் விழாவில் 30 ஆயிரத்து 425 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 25 ஆயிரம் பேர் மட்டுமே இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகமானோர் இணைந்துள்ளதால் மு.க.ஸ்டாலின் உற்சாகத்துடன் பேசி வருகிறார்.

 

அமமுகவில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இன்று திமுகவில் இணையும் கூட்டம் கரூரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் நம்மை வெல்ல யாரும் இல்லை. இனி வெல்ல யாரும் பிறகவும் முடியாதுகட்சிக்கு திரும்பியுள்ள செந்தில் பாலாஜி முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முறையாக திமுக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில் கட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். இரண்டு கரங்களை கூப்பி வரவேற்கிறேன். பெற்றோர்களை நம்பி காக்கும் பிள்ளையாக வந்திருக்கிறீர்கள்.  லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறீர்கள். தாமதமாக வந்தாலும் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.

இங்கிருந்து சென்ற நீங்கள் மீண்டும் இங்கே திரும்பியதற்கு மகிழ்ச்சி. மக்கள் கூட்டத்தை காணும்போது, நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை என்ற உணர்வோடு பார்க்கிறேன்’’  எனத் தெரிவித்தார். கரூரில் 25 ஆயிரம் பேரை இணைக்க உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவித்து இருந்த நிலையில் 30425 பேர் திமுகவில் இணைத்தது மு.க.ஸ்டாலினை உற்சாகப்படுத்தியுள்ளது.