மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட செந்தில் பாலாஜி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனையடுத்து அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி கரூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். மக்களவை தொகுதிக்கு மட்டுமின்றி அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தோ்தலிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 
 
ராஜ்யசபா எம்.பியாக உள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மக்களவைத் தோ்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவின் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிட கனிமொழி மனு அளித்துள்ளார்.

வேலூா் தொகுதியில் போட்டியிட திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் விருப்ப மனு அளித்துள்ளார்.