Asianet News TamilAsianet News Tamil

பொதுப்பணிதுறை அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி..? ஆட்சியை பிடிக்கும் முன்பே அதிரடி வாக்குறுதி..!

அரவக்குறிச்சியில் வென்றால் செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராகி விடுவார் என இப்போதே வாக்குறுதியை வாக்காளர்களிடம் அள்ளி விட்டு வருகிறார்கள் திமுக நிர்வாகிகள். 
 

senthil balaji public works department minister
Author
Tamil Nadu, First Published Apr 30, 2019, 4:28 PM IST

அரவக்குறிச்சியில் வென்றால் செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராகி விடுவார் என இப்போதே வாக்குறுதியை வாக்காளர்களிடம் அள்ளி விட்டு வருகிறார்கள் திமுக நிர்வாகிகள்.

 senthil balaji public works department minister

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் அமமுகவிலிருந்து வந்த செந்தில் பாலாஜி. அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி, “உங்களுடைய வாக்கு நூற்றுக்கு நூறு உதயசூரியன் சின்னத்துக்குதான் என்று நம்பிக்கை அளித்ததற்காக எனது நன்றி.

senthil balaji public works department minister

கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளார். அதுபோலவே, சகோதரர் செந்தில் பாலாஜியையும், அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில், நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது.senthil balaji public works department minister

அதில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அப்பொழுது செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்பார். அப்பொழுது உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” எனக் கூறினார். சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றால் அமைச்சராக பொறுப்பேற்பார் என வாக்கு சேகரித்து வருவதால் அதிமுகவினர் ஆத்திரத்தில் உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios