கைது செய்து இழுத்து சென்ற போது தலையில் காயம்..! மனித உரிமை ஆணையத்திடம் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்
அமலாக்கத்துறையால் கைது செய்து இழுத்து சென்ற போது தலையில் காயம் அடைந்ததாக அமைச்சர் செந்தில பாலாஜி மனித உரிமை ஆணையத்திடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில வேலை வாங்கி தருவதாக பணம்பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுமார் 8 வருடங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. நேற்று முன் தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய விசாரணை அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிவித்ததையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டில் இருந்து காரில் கொண்டு செல்லப்பட்ட செந்தில் பாலாஜி காரில் அழுதபடி நெஞ்சில் கை வைத்தபடி சென்றார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மனித உரிமை ஆணையம் விசாரணை
இந்த கைது சம்பவத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக திமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளார். இது தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கூறுகையில், புகார் கொடுக்கப்பட்ட அடிப்படையில் தான் நான் இங்கு வந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்த்தேன் அவர் சோர்வாக காணப்பட்டார். அவரை கைது செய்யப்பட்டபோது கடுமையாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அவருக்கு இருக்கக்கூடிய இதய நோய் பற்றியும் தெரிவித்தார். கைது செய்யும் பொழுது தனக்கு தொந்தரவு கொடுத்த அதிகாரிகளை பேயரையும் என்னிடம் கூறினார்.
தலையில் காயம்
இதைப்பற்றி மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவித்தார். அவரை கடுமையான முறையில் கைது செய்துள்ளனர். அப்போது அவருக்கு காது அருகே ஒரு பகுதியில் வீக்கமாக உள்ளது. எனக்கு நெஞ்சு வலி எனக் கூறியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் என்னை கிழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக கண்ணதாசன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்