'ஏன் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என கேள்வி கேட்டுள்ளார். உடனடியாக விருதுகளை அறிவியுங்கள் என உத்தரவிட்டு இருக்கிறார் மோடி.
தமிழ் அறிஞர்களுக்கு செந்தமிழ் விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 
ஆனால் ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த விருதுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. யாருக்கு இந்த விருதுகளை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, பிரதமர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 'தன் பேச்சில் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசும் மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள், ஏன் இதுவரை வழங்கப்படவே இல்லை' என கேள்விகள் எழுந்து உள்ளன.
இந்த விஷயம் தெரிந்ததும் மிகவும் கோபப்பட்டாராம் பிரதமர் மோடி. 'ஏன் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என கேள்வி கேட்டுள்ளார். உடனடியாக விருதுகளை அறிவியுங்கள் என உத்தரவிட்டு இருக்கிறார் மோடி. எனவே ஆறு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக விரைவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் இந்த விருதுகள் பெற்றவர்கள் பட்டியல் வெளியாகும் என்கின்றனர் அதிகாரிகள்.
