senior ministers met at chief secraratry
தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பாலான அமைச்சர்கள் டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி உள்ளனர். வெற்றிவேல், டெல்லிக்கான தமிழக அரசின் பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள் மட்டுமே தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். பிரிந்து சென்ற பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது.

இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் மூத்த அமைச்சர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்தியலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன்,வேலுமணி, வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பன்னீர்செல்வம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதென விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
