உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (94), சில நாட்களாக காய்ச்சல், சளி பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் கடந்த 21ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், லேசாக சளி இருந்ததால், சிகிச்சையில் இருந்த அவர் தற்பொழுது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.