சசிகலா முதல்வராக வேண்டிய அவசியம் என்ன வந்தது. நன்றாக செயல்பட்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் வினோத விளக்கத்தை அளித்துள்ளார்.

ஒருவர் நன்றாக செயல்படுகிறார் சரி இன்னோருவர் நன்றாக நடப்பார் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் அல்லவா. இது ஒரு ஜனநாயக இயக்கம் ஓபிஎஸ் முதல்வர் என்கிறார்கள் சரி என்கிறோம். ஓபிஎஸ் சசிகலா முதல்வராக வேண்டும் என்று கூறுகிறார். சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார் சரி என்க்கிறோம். 

சசிகலா முதல்வராக செயல்பட ஒரு வாய்ப்பு கொடுங்களேன். அவர் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பணியாற்றி தன்னை நிருபிப்பார். ஆகவே அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்.