தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்னும் வெயில் மிகக் கடுமையாக வாட்டி வதைத்து வருவதால், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து அறிவிக்கப்படும்  என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை.

வெயில் கடுமையாக இருந்ததால், கடந்த 1 ஆம் தேதி திறப்பதாக இருந்த  பள்ளிகள் 7 ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதையடுத்து வரும் புதன் கிழமை பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தொடர்ந்து பல மாவட்டங்களில் வெயில் கடுமையாக தாக்கி வருவதாக தெரிவித்தார்.

இதனால் மாவட்ட  ஆட்சியர்களிடம் கலந்து ஆலோசித்து பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து முடிவு செய்யப்படும என செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் தாயராக இருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.