Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Plus 2 public examination in Tamil Nadu and Puducherry is going to start today The public examination is scheduled to arrive on March 31
sengottayan pressmeet-about-hsc-exam
Author
First Published Mar 2, 2017, 11:48 AM IST


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொது தேர்வு வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் பிரஸிடென்ஸி பள்ளியில் மாநில கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 65,000 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டு 8,3500 35 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,427. தேர்வு நடத்தும் அலுவலர்கள் 35,000 பேர்.

sengottayan pressmeet-about-hsc-exam

இந்தாண்டு, தமிழ், உருது, பிரெஞ்ச், கன்னடம், மலையாளம், அரபி, ஜெர்மன், சமஸ்கிருதம், இந்தி உட்பட 10 மொழிகளில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.

மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வை எழுத தமிழக மாணவர்கள் தயாராக உள்ளனர். போதுமான அளவு எல்லா பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்கள் இருப்பதாகவும், இல்லாத பள்ளிகளில் PTA மூலமாக தமிழ் ஆசிரியர்களை நியமித்து கல்வி கற்பித்துள்ளோ.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios