செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது... முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: 3 மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்... வைகோ கண்டனம்!!
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனிடையே இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன.
இதையும் படிங்க: நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? அண்ணாமலை கேள்வி?
அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.