ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை மற்றொரு பக்கம் டிடிவி தினகரன் என ஒட்டுமொத்த சொல்லி அடித்த செந்தில் பாலாஜி சுமார் 400000 வாக்கு வித்தியாசத்தில் அரவக்குறிச்சியில் மெகா வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

பணப்பட்டுவாடாவால் தேர்தல் ரத்தாகி ஓரே நைட்டில் பேமஸான அரவக்குறிச்சியை  இம்முறை தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி 40,000 வாக்குகள் அதிகமாக வெற்றி பெற்றிருக்கிறார். அரவக்குறிச்சியை பொறுத்தவரை அ.தி.மு.க சார்பில் வி.வி. செந்தில்நாதனும், தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க சார்பில் சாகுல் ஹமீதும் போட்டியிட்டனர். இந்த மூன்று வேட்பாளர்களின் பிரச்சாரத்தில் ஆரம்பம் முதலே செந்தில்பாலாஜி கைதான் ஓங்கி இருந்தது.

செந்தில் பாலாஜி சொந்த ஊரில் தனது பெயரை நிருப்பிக்க வேண்டிய காட்டாயமும் அவருக்கு இருந்தது. இதனால் அரவக்குறிச்சியை கட்சியினர் மட்டுமில்லாமல், பொது மக்களும் உற்று பார்க்க ஆரம்பித்தனர். வாக்கு எண்ணிக்கை நாளான இன்று ஆரம்பம் முதலே செந்தில் பாலாஜி முன்னிலையில் இருந்தார். தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவில் செந்தில் பாலாஜி 40,000 வாக்குகள் அதிகமாக வெற்றி கோட்டை தொட்டிருக்கிறார்.