4 கோடி பணம் பறிமுதல்.. நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யனும்- இறங்கி அடிக்கும் செல்வப்பெருந்தகை

 தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளிடம் நிதியை குவித்த பாஜக, பெரும் நிதியை தேர்தலில் செலவிட திட்டமிட்டிருப்பது ரூ. 4 கோடி சிக்கியது அம்பலப்படுத்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 
 

Selvaperunthagai demands disqualification of Nellai BJP candidate Nainar Nagendran KAK

ரயிலில் 4 கோடி பணம் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்து வருகிறது. அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தவும் தேர்தல் ஆணையம் பறக்கும் படையை அமைத்துள்ளது.

இந்தநிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் ம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடையது என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

Selvaperunthagai demands disqualification of Nellai BJP candidate Nainar Nagendran KAK

பாஜக வேட்பாளருக்கு சொந்தமானதா.?

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தேர்தல் செலவுக்காக கட்டுக்கட்டாக கொண்டுசென்ற ரூ. 4 கோடி பணத்தை ரகசிய தகவலின்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக அவரது ஓட்டல் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.நெல்லை மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயலாகும். தேர்தல் ஆணையம் ஒரு மக்களவை தொகுதிக்கு  செலவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 95 லட்சத்தை விட அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. 

Selvaperunthagai demands disqualification of Nellai BJP candidate Nainar Nagendran KAK

தகுதி நீக்கம் செய்யனும்

இந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மீது உரிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்துவதோடு அவர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என தேர்தல்  ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வெற்றிபெற்று விடலாம் என்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது.

ஏற்கனவே தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளிடம் நிதியை குவித்த பாஜக, பெரும் நிதியை தேர்தலில் செலவிட திட்டமிட்டிருப்பது ரூ. 4 கோடி சிக்கியது அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் பாஜகவுக்கு தமிழக மக்கள் உரிய  பாடத்தை தேர்தலில் புகட்டவேண்டும் என செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

தேர்தலுக்கு முன் ஓட்டை பற்றியும், தேர்தலுக்குப் பின் வீட்டை பற்றியும் கவலைப்படும் திமுக: நடிகை விந்தியா பேச்சு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios