Asianet News TamilAsianet News Tamil

அண்ணாவைப்பற்றி பேசினால் நாக்கு துண்டாகும்..! அழுகி விடும்... அண்ணாமலையை எச்சரிக்கும் செல்லூர் ராஜூ

சாதாரண மக்கள் எல்லாம் மாமன்ற உறுப்பினராக ஆகியிருக்க முடியுமா? சாதரணமாக இருப்பவர்களும் போட்டிக்கு வரலாம் மக்கள் பணியாற்றலாம். அந்த சாதனையை புரிந்தவர் பேரறிஞர் அண்ணா, அவரைப் பற்றி அவதூறாக பேசினால் நாக்கு அழுகிவிடும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
 

Sellur Raju warns that if you talk about Anna, your tongue will rot KAK
Author
First Published Sep 17, 2023, 12:04 PM IST

அண்ணாவை கேலி செய்வதா.?

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.  மதுரையின் வளர்ச்சிக்கு அதிமுக முக்கிய பங்கு வகித்துள்ளது. மதுரையில் இன்னும் 50 ஆண்டிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எடப்பாடியார் திட்டம் தீட்டியுள்ளார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரையில் பல்வேறு பாலங்களை கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாவைப் பற்றி ஒரு சிலர் கேலி பேசுகிறான். இறந்த தலைவர்களைப் பற்றி கேலி பேசுகிறவன். யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்றைக்கும் நாங்கள் கலைஞர் என்று தான் சொல்கிறோம்.  கலைஞர் இருக்கும் பொழுது அவரை திட்டி இருக்கிறோம். மறைந்த தலைவரே மதிக்க வேண்டும்.

Sellur Raju warns that if you talk about Anna, your tongue will rot KAK

சாதாரணமானவர்களும் கோட்டைக்கு சென்றது எப்படி.?

மதிக்கத் தெரியாதவர்களை இந்த தமிழ் சமுதாயம் மிதிக்கத்தான் செய்யும்.  அரசியலில் எங்கேயோ இருக்கலாம், ஆளுங்கட்சி என்ற மிதப்பில் பேசினால் அண்ணாவைப் பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு துண்டாகும் இப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா மட்டும் இயக்கம் தொடங்காமல் இருந்தால் சாதாரண குப்பனும், சுப்பனும் சட்டமன்ற உறுப்பினராகவும் மாமன்ற உறுப்பினராகவும் ஆகியிருக்க முடியாது.

சாதாரண மக்கள் எல்லாம் மாமன்ற உறுப்பினராக ஆகியிருக்க முடியுமா? சாதரணமாக இருப்பவர்களும் போட்டிக்கு வரலாம் மக்கள் பணியாற்றலாம். அந்த சாதனையை புரிந்தவர் பேரறிஞர் அண்ணா, அவரைப் பற்றி அவதூறாக பேசினால் நாக்கு அழுகிவிடும், யார் பேசினாலும் சரி அவருடைய நாக்கு அழுகிப்போகும்.

Sellur Raju warns that if you talk about Anna, your tongue will rot KAK

தொட்டால் தீட்டு பட்டால் பாவம்

நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஐஏஎஸ் அதிகாரி பல பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் வித்திட்டவர்கள் பெரியாரும், அண்ணாவும் தான். தொட்டால் தீட்டு பட்டால் பாவம், இந்த தெருவில் நடக்கக் கூடாது என்பதை மாற்றியவர்கள் இந்த இரண்டு பேரும் தான். சாதாரணமாக இது மாற்றப்படவில்லை . இந்தியாவில் ஆளுகின்ற கட்சிகள் எல்லாம் சொல்கிறார்கள் நாங்கள் தான் பெரியவர்கள் என்று, அங்கெல்லாம் பாலாறும் தேனருமா ஓடுகிறது. தமிழகம் தான் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைந்துள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அமலாக்கத்துறை சோதனையால் தூக்கமின்றி தவிக்கும் ஸ்டாலின்..! கிண்டல் செய்யும் செல்லூர் ராஜூ

Follow Us:
Download App:
  • android
  • ios